விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அவனைவிட்டுஅகன்று உயிர்ஆற்றகில்லா*  அணிஇழைஆய்ச்சியர் மாலைப்பூசல்* 
    அவனைவிட்டு அகல்வதற்கே இரங்கி*  அணிகுருகூர்ச் சடகோபன்மாறன்*
    அவனிஉண்டு உமிழ்ந்தவன் மேல்உரைத்த*   ஆயிரத்துள் இவை பத்தும்கொண்டு* 
    அவனியுள் அலற்றிநின்று உய்ம்மின் தொண்டீர்!   அச்சொன்ன மாலை நண்ணித்தொழுதே!    (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அவனை விட்டு அகன்று – கண்ண பிரானை விட்டுப் பிரிந்து
உயிர் ஆற்றகில்லா – உயிர் தரிக்கமாட்டாத
அணி இழை ஆராய்ச்சியர் – அழகிய ஆபரணங்களணிந்த கோபிமார்கள்
மாலை பூசல் – மாலைப் பொழுதிலே பட்ட பாட்டை
அவனை விட்டு அவல்வதற்கே இரங்கி – அப்பெருமானை விட்டு பிரிந்திருக்கை காரணமாக நோவுபட்டு

விளக்க உரை

வண்துவரைப் பெருமாளைப் பிரிந்து தரிக்கமாட்டாமல் அந்நியம் போதில் அணியிழையாய்ச்சியர்கள் திரளநின்று கூப்பிட்டாப்போலே ஆழ்வாரும் அவனைப் பிரிந்து தரிக்கமாட்டாமை கூப்பிட்டலற்றின இத்திருவாய்மொழி தொண்டர்களுக்கு உஜ்ஜீவனஸாதன மென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது. "இப்பதிகம் தொண்டர்களுக்கு உஜ்ஜீவனத்தைத் தரும்" என்றிங்ஙனே பலக்ருதியாகச் சொல்லாமல் "தொண்டீர் உய்மின்" என்று சொல்லியிருந்தாலும் பயனுரைக்கும் வகைகளிலே இதுவுமொருவகையென்று கொள்க இப்பாரைத்தைக் கற்பார்க்கு என்னைப் போலே கூப்பிடவேண்டா; ஆசைப்பட்ட பேறுபெறுகையில் கண்ணழிவில்லை என்றவாறு.

English Translation

This decad of the thousand sweet songs on the Lord who swallowed the Earth, by Kurugur city's Maran Satakopan, desolate on separation from the Lord recalls the wall of a Gopi separated from the Lord at dusk. Devotees, sing this well as worship and rule the Earth

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்