விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆருக்குஎன் சொல்லுகேன்? அன்னைமீர்காள்!*  ஆர்உயிர் அளவுஅன்று இக்கூர்தண்வாடை* 
    கார்ஒக்கும்மேனி நம்கண்ணன் கள்வம்*   கவர்ந்த அத்தனிநெஞ்சம் அவன்கண் அஃதே*
    சீர்உற்றஅகில் புகையாழ்நரம்பு*  பஞ்சமம்தண் பசும்சாந்துஅணைந்து* 
    போர்உற்றவாடைதண் மல்லிகைப்பூப்*   புதுமணம்முகந்துகொண்டு எறியும்ஆலோ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கார் ஓக்கும் மேனி – காளமேகம் போன்ற திருவுருவத்தை யுடையனான
நம் கண்ணன் – நமது கண்ணபிரான்
கள்வம் – தனது கள்ளக் செயல்களினால்
அவர்ந்த – அபஹரித்துக் கொண்டு போன
அத் தனி நெஞ்சம் – நம்மை விட்டுத் தனியேயான நெஞ்சானது

விளக்க உரை

கீழ்ச்சொன்ன பதார்த்தங்களெல்லரீம் திரளவந்து நண்பாராதே நலிகிற படியைச் சொல்லுகிறாள். ஆருக்கு என் சொல்லுகேன்? = என்னைப்போலே நீங்கள் நெஞ்சிழந்தவர்களு மல்லீர்; வாடை முதலான போக்ய பதார்த்தங்களைத் தேடிப்பிடித்து அவைகொண்டு உகப்பவர்களுமாயிருக்கின்றீர்கள்; இப்படிப்பட்டவுங்களுக்கா நான் என்னிலையைச் சொல்லுவது; என்படி. இக்கூர்தண்வாடை ஆருயிரளவன்று=மிகைத்துக் குளிர்ந்து வீசுகின்ற வாடையானது நம்முயிரைக் கொண்டு போமளவன்று என்கிறவிதனால், சித்வதஞ்செய்யப் பார்க்கின்ற தென்றபடி,. சிரமமின்றி உயிரைக் கொண்டு போனால் நல்லதே; அப்படி கொண்டு போமதன்று; உயிரைக் கொள்ளை கொள்ளாது விட்டிட்டு ஹிம்ஸிக்க நினைத்திராநின்றது போலுமென்றவாறு "ஆருக்கென் சொல்லுகேன்" என்றவிடத்து– "வடுகர்க்குத் தமிழர் வார்த்தை சொல்லுமாபோலே" என்பது ஈடு. நெஞ்சம் கண்ணபிரானுடைய கள்வப்பணி மொழிகளிலே யீடுபட்டடொழிந்தது. பின்னடிகளில், மற்றுமுள்ள பாதகப்பொருள்கள் பேசப்பட்டன.

English Translation

O Ladies! To whom can I say this? Alas, my heart remains with the thief! The overpowering cool breeze softly kills the soul, armed with the fragrance of bright incense, cool sandal paste, and fresh jasmine flowers, it comes blowing over me, with the strains of Panchama on the yar-harp

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்