விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    யாமுடை நெஞ்சமும் துணைஅன்றுஆலோ!*  ஆ புகுமாலையும் ஆகின்றுஆலோ,* 
    யாமுடை ஆயன்தன் மனம் கல்ஆலோ!*  அவனுடைத் தீம்குழல் ஈரும்ஆலோ*
    யாமுடைத் துணைஎன்னும் தோழிமாரும்*   எம்மில் முன்அவனுக்கு மாய்வர்ஆலோ* 
    யாமுடை ஆர்உயிர் காக்குமாறுஎன்?  அவனுடை அருள் பெறும்போது அரிதே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

யாமுடை துணை என்னும் தோழிமாரும் – எமக்குத் துணைவரென்று பேர் பெற்றிருக்கின்ற தோழியரும்
எம்மில் முன் – எனக்கு முன்னே
அவனுக்கு மாய் லர் ஆல் ஓ – அவள் பொருட்டு நோவுபடா நின்றார்களந்தோ
அவனுடை அருள் பெறும் போது அரிது – அவனது அருளைப் பெறுவது அரிதாயிரா நின்றது
யாமுடை ஆர் உயிர் எனக்கும் ஆறு என் – எனது அருமையான வுயிரைக் காக்கும் விதம் என்னோ

விளக்க உரை

அடியார்க்கெளியனென்று பேர் பெற்றவனுடைய இரக்கம் பெறுகை அரிதான பின்பு நம்முயிரைக் காக்கும் விரகுண்டோ வென்கிறாள். ஆபுகுமாலையுமாகின்றாலோ= பசுக்கள் வந்து புகும் மாலைப் பொழுது வந்துவிட்டதே! இம்மாலைப் பொழுது சிறிது தாமதித்து வந்தாலென்ன? ஐயோ ! இப்போதே அணித்தாயிற்றே ! என்று நோகிறாள். மாலைப் பொழுது வந்தால் கண்ணபிரானும் வந்திடுவனென்னுற ஆறியிருக்கலாகாநோவென்ன யாமுடை ஆயன்தன்மனம் கல்லாலோ என்கிறாள். அவனுடைய நெஞ்ச கல்லாயிற்றே! அவனோ வருவானென்கை "சேவிக்க வாழ்விக்கு மெங்கோன ரங்கன் திருக்கோயில் சூழ், நாவிற் கலந்தாசை தந்தேசினார் நெஞ்சு கல்நெஞ்சமோ?" (திருவாங்கக் கலம்பகம்) என்ற பிள்ளைப் பெருமாளையங்கார் பாசுரம் இங்கு நினைக்கத்தகும். அவனுடைய நெஞ்சு கல்லென்று தோன்றினால் கைவாங்கி நிற்க வேண்டாலோ வென்ன, அவனுடைய இனிய குழலோசை கைவாங்க வொட்டுகிறதில்லை யென்கிறாள் அவனுடைத் தீங்குழலீருமாலோ என்று. இங்கே ஈடு "நான் பகலெல்லாம் பிரிந்தேன், வரவு தாழ்த்தேன், ஆற்றேன், பரதந்த்ரனாயக் கெட்டேன் என்கிற புடைகளிலே சில பாசுரங்களை வைத்திறே குழலுதுவது; அது 'கல்லென்று கைவாங்காதே கிடாய், நீர்கிடாய்' என்னா நின்றது. இப்பாசுரங்களாலே அவனுடைய இனிய குழலோசையானது ஈராநின்றது" நெஞ்சும் துணையன்றிக்கே அவனும் உதவாதபோது துணையான தோழிமாராகிலும் உதவவேண்டுமே; அந்தோ! அவர்களும் என் வ்யஸனத்தைக் கண்டு எனக்கு முன்னே நோவுபடாநின்றார்களென்கிறது மூன்றமடி. இத்தனிமையில் ஆத்மா தரிக்கும் விரகு தெரியவில்லையே ; அவனுடைய க்ருமையைப் பெறுகை அரிதாயிருக்கின்றதே !

English Translation

My heart is no companion, how now can I save my life? Dusk has set in. The cows are returning. our cowherd's flute-melody hurts us sweetly! Alas, he has heart at stone. My trusted companions are dying before me, and the time for his grace is far

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்