விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புகலிடம் அறிகிலம் தமியம்ஆலோ!  புலம்புறு மணிதென்றல் ஆம்பலாலோ* 
    பகலடுமாலைவண் சாந்தமாலோ!*  பஞ்சமம் முல்லைதண் வாடையாலோ*
    அகல்இடம் படைத்துஇடந்து உண்டுஉமிழ்ந்து-  அளந்து*  எங்கும் அளிக்கின்ற ஆயன்மாயோன்* 
    இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான்*  இனிஇருந்து என்உயிர் காக்குமாறென்?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புலம்புறு மணி – (சேக்களின் கழுத்தில்) ஒலிக்கின்ற மணியும்
தென்றல் – தென்றற் காற்றும்
ஆம்பல் – இலைக்குழலும்
ஆல் ஓ – ஈர்கின்றவிதம் சொல்லத் தெரியவில்லையே
பகல் அடு மாலை – பசுரபோதை முடித்து வந்து தோற்றுகின்ற மாலைப்போதும்

விளக்க உரை

பல படிகளாலும் ரக்ஷிக்குமெம்பெருமான் வருகின்றிலன்; பாதக பதார்த்தங்கள் தனித்னியே யன்றியே திரள்திரளாகவும் தோன்றி நலிகின்றன; தப்பிப் பிழைக்கும் வழி தெரிய வில்லையே யென்கிறாள். "பகலிடமறிகிலம் தமியமாலோ" என்கிறது–கீழ்ப்பாட்டிற் சொன்ன கஷ்டங்களுக்காகவுமாம்: இப்பாட்டிற் சொல்லப்போகிற கஷ்டங்களுக்காகவுமாம். புலம்புறுமணி=நாகுகளைத் தொடருகின்ற கேக்களின் கழுத்தில் கட்டின மணியினோசை விரஹிகளுக்கு உத்தீபகமென்க. ஆம்பல் என்று ஊதுகுழலுக்குப்பெயர்; அதன் ஓசையைச் சொன்னபடி யிங்கு. பகலடுமாலை–ஆச்வாஸகரமான பகற்போதை முடித்துக் கொண்டு வந்து தோற்றின மாலைப்போது. பஞ்சமம்–* பிக: கூஜதி பஞ்சமம்" என்னும்படியான பண். முல்லை யென்றி யாழையுஞ் சொல்லும், முல்லைப் பூவையுஞ் சொல்லும் ; விரஹிகளுக்கு இரண்டும் உத்தீபகமே. இவை இன்னது செய்கின்றன வென்று சொல்லாமல் விட்டது, 'புலி புலி' என்னுமாபோலே ; இவற்றின் பேரைச் சொன்னது தானே இவை செய்யுங் கொடுமையைச் சொன்னபடியாம். இவையெல்லாம் முன்பு அனுகூலங்களாயிருந்தவையே; இப்போது பிரதிகூலமாவதற்குக் காரணஞ் சொல்லுவன பின்னடிகள். படைத்தல் இடத்தல் உண்டுமிழ்தல் அளத்தல் முதலிய காரியங்களைச் செய்து பலபடியாலும் ரக்ஷிக்கையே தொழிலான ஸர்வேச்வரன் வருகின்றிலன்; இனி ப்ராணதாரணம்பண்ணும் வகையறியேன் என்கிறளாயிற்று.

English Translation

Alas this forlorn self has no place to go, to escape from the breeze and the reed-flute, the evening Sun, the Sandal fragrance, the Mullai flowers and the Panchama Pann. The Lord who made, lifted and measured the Earth struck death to lifted, and measured the Earth struck death to the Asuras, Alas, Gopala, my protector does not come; how now shall I hold on to my life

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்