விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வண்ணம் மணிமாட*  நல்நாவாய் உள்ளானைத்*  
    திண்ணம் மதிள்*  தென்குருகூர்ச் சடகோபன்* 
    பண்ணார் தமிழ்*  ஆயிரத்து இப்பத்தும்வல்லார்*  
    மண்ணாண்டு*  மணம்கமழ்வர் மல்லிகையே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திண் அம்மதின் தென் குருகூர் சடகோபன் – திடமாயழகிய மதிள்களையுடைத்தான திருநகரிக்குத் தலைவரான ஆழ்வாருடையதாய்
பண் ஆர் தமிழ் – பண்ணிறைந்த தமிழான ஆயிரத்தில் ஆயிரத்து
இப்பத்தும் வல்லார் – இப்பத்தையும் ஒதவல்லவர்கள்
மண் ஆண்டு – இவ்விபூதியை நெடுங்காலம் ஆண்டு
மல்லிகை மணம் கமழ்வர் – "ஸர்வகந்த:" என்னப்படுகிற எம்பெரு மானோடே ஸாம்யாபத்தி பெறுவர்கள்

விளக்க உரை

இத்திருவாய்மொழி வல்லார் ஐஹிக ஆமுஷ்மிக ஸகலபோகங்களையும் புஜிக்கப் பெறுவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். மண்ணாண்டு என்பதனால் ஐஹிகபோகம் புஜிக்கப் பெறுகை சொல்விற்று. மல்லிகை மணங்கமழ்வர் என்பதனால் ஆமுஷ்மிகபோகம் புஜிக்கப்பெறுகை எங்ஙனே சொல்லிற்றாகிறதென்னில்; மல்லிகை மணமென்று ஒரு பரிமளத்தை மாத்திரம் சொன்னபடியன்று; இது உபலக்ஷணமாய் ஸகல பரிமளங்களையும் சொன்னபடியாகி, வேதாந்தங்களிலே ஸர்வ கந்த* என்று ஸகல பரிமளங்களும் வடிவெடுத்தவனாகக்ச சொல்லப்படுகிற எம்பெருமானாகப் பெறுவர்–எம்பெருமானோடு ஸாம்பாந்நராவர் என்றபடியாம் *தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே யொக்க அருள் செய்வர் * என்ற திருமங்கையாழ்வார் பாசுரம் இங்கே நினைக்கத் தக்கது. "மல்லிகை மணங்கமழ்வர்" என்பதற்குப் பன்னீராயிரவுரைகாரர் "மல்லிகைபோலே பசுத்தமான யகஸ்ஸெளரப்யவிகாஸத்தை யுடையவராவர்" என்றுரைத்தார். அவ்வுரை ஆறாயிரப்படி முதலிய வியாக்கியானங்களுக்குப் பொருந்தியதன்று.

English Translation

This decad of the thousand Pann-based songs, by walled kurugur's Satakopan on the lord Tirunavai residing amid painted mansions, -those who master it will rule Earth and exude the fragrance of Jasmine

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்