விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அங்கம்விட்டுஅவை ஐந்தும் அகற்றி*  ஆவி மூக்கினிற் சோதித்த பின்னை* 
  சங்கம்விட்டுஅவர் கையைமறித்துப்*  பையவே தலை சாய்ப்பதன்முன்னம்*
  வங்கம்விட்டுஉலவும் கடற்பள்ளி மாயனை*  மதுசூதனை மார்பில்- 
  தங்க விட்டு வைத்து*  ஆவதுஓர் கருமம் சாதிப்பார்க்கு*  என்றும் சாதிக்கலாமே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கையை மறித்து - கையை விரித்துக்காட்டி
பைய - மெள்ள மெள்ள
தலை சாய்ப்பதன் முன்னம் - (தங்கள்) தலையைத் தொங்கவிட்டுக் கொள்வதற்கு முன்னே,
வங்கம் - கப்பல்களானவை
விட்டு உலவும் - இடைவிடாமல் திரியப்பெற்ற

விளக்க உரை

பிராணம், அபாதம், வயாநம், உதாகம், ஸமாநம் என்ற பஞ்ச ப்ராணன்களும் உடலைவிட்டொழிந்தபின்பு, அருகிலுள்ள பந்துக்கள் அந்தப் பிணத்தின் மூக்கில் கையைவைத்துப் பார்த்து ‘ஆவி போயிற்று’ என்று உறுதியாகத் தெரிந்துகொண்டு அவ்வுடலில் ஆசையைவிட்டிட்டு, யாரேனும் வந்து ‘அவர்க்குத் திருமேனி எப்படியிருக்கின்றது?’ என்று கேட்கில் அதற்கு அவர்கள் வாய்விட்டு மறுமொழி சொல்லமாட்டாமல், ‘உயிர்போயிற்று’ என்பதைக் காட்டும்படி கையை விரித்துக் காட்டிவிட்டு, ஒருமுலையிலிருந்துகொண்டு தலைகவிழ்ந்து அழும்படியான தசை நேரிடுவதற்குமுன் , க்ஷீராப்திசாயியான எம்பெருமானை நெஞ்சால் நினைத்துக்கொண்டு ஸ்ரூபமான ப்ரபத்தியை அநுஷ்டிப்பவர்கள், எந்நாளும் அநுபவிக்கக்கூடிய பேற்றைப் பெறுவர்களென்கிறார். (அகற்றி) ‘அகல’ என்னும் செயவெனெச்சத்தின் திரிபாகிய ‘அகன்று’ என்ற வினையெச்சம் பிரயோகிக்கவேண்டுமிடத்து, அகற்றி என்றார்; தன்வினையில் வந்த பிறவினை; “குடையுஞ் செருப்புங் சூழலுந் தருவித்து” என்றது போல மூக்கினிற்கையைவைத்து ஆவியைச்சோதிப்பது, இப்போதும் வழக்கத்திலுள்ளமை அறிக. சங்கம் - ஆசைக்கும்பெயர்: அன்றி, *** என்னும் வடசொற்றிரிபாகக்கொண்டு, கூட்டமென்ற பொருள்கொண்டால், ஒவ்வொருவரும் தனித்தனியே பிரிந்துபோய் என்று கருத்தாம்.

English Translation

When the five Pranas leave the body, those around will check the nose for signs of life, then casting all doubts, throw up their hands and slowly lower their heads. Before that happens, those who can steadfastly keep in their hearts the ocean-reclining wonder-Lord Madhusudana, will see his form forever.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்