விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அருளாது ஒழிவாய்*  அருள்செய்து*  அடியேனைப் 
    பொருளாக்கி*  உன்பொன்அடிக்கீழ்ப் புகவைப்பாய்*
    மருளேஇன்றி*  உன்னை என்நெஞ்சத்துஇருத்தும்* 
    தெருளேதரு*  தென்திருநாவாய் என்தேவே!  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அருளாது ஒழிவாய் – என்பால் அருள் செய்யாதிருக்கிலுமிரு
அடியேனை – அடியேன் பக்கலில்
அருள் செய்த – க்ருபைபண்ணி
பொருள் ஆக்கி – ஒரு உஸ்துவாக்கி
உன்பொன் அடி கீழ் புகவைப்பாள் – உன் திருவடிகளின் கிழே வைத்துக் கொண்டாலும் கொள்.

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் "ஆவாவடியானிவனென்றருளாயே" என்றவர், இப்பாட்டில், அருளினாலுமருள்க ; அருளாதொழியினுமொழிக என்கிறார். இப்பாட்டின் ஈற்றடியை அந்வயிப்பதில் யோஜநாபேதமுண்டு; தெருளேதரு என்பதை திருநாவாய்த தேவனுக்கு விசேஷணமாக்கி யுரைப்பர் (ஆறாயிரப்படியில்) பள்ளான். தருஸ்ரீதந்தருவேணும் என்று வினை முற்றாகக் கொண்டு உரைத்தனர் மற்றையுரே யாசிரியர்கள். தரு என்பதற்கு, தா என்பதன் பொருள்க கொள்ளுமிடத்து, தருகவென்பதன் நடைக்குறையாகக் கொள்ள வடுக்கும். ஆறாயிரப்படியருளிச்செயல்–”அஜ்ஞாநகந்தமில்லாத தொரு படி உன்னுடைய ஸ்வரூபரபகுணபிபூதி விஷய திவ்யஜ்ஞானத்தை” உன் க்ருமையாய எனக்குத் தந்தருளி நீ இன்னமும் உன் க்ருயையேல 'நம்மடியாளிவன்' என்று விஷயீகரித்தருளி அடியேனை உன் பொன்னடிக்கீழ்ப் புகவைத்தருளுவாய், வைத்தருளாதொழிவாய்; திருவுள்ளமானபடி செய்தருள் என்று கொண்டு எம்பெருமானை இன்னதாகிறார் ;" என்று "அருளவுமாம், தவிரவுமாம்; அஜ்ஞாநகந்த மில்லாபடி உன்னை என்னெஞ்சிலே யிருத்தும்படி தெளிவைத் தரவேணுமென்கிறார்" என்று மற்றுள்ள வாசிரியர்கள் பணிக்கும்படி. தெருளைப் பெற்ற பீரான ஆழ்வார் அதைத் தந்தருள வேணுமென்று பிரார்த்திப்பது– பெற்றவனுக்கு விச்சேதமில்லாதபடி அபிவிருத்தியைச் செய்தருளவேணுமென்று பிரார்த்திக்கின்றபடி.

English Translation

O Lord of Tirunavai in my heart, dispeling all my doubts! Make me worthy of your feet or else forsake me, -your servant

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்