விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கோவாகிய*  மாவலியை நிலம்கொண்டாய்* 
    தேவாசுரம் செற்றவனே!*  திருமாலே*
    நாவாய்உறைகின்ற*  என்நாரணநம்பீ* 
    'ஆஆ அடியான்*  இவன் என்று அருளாயே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திருமாலே – திருமகள் கொழுநனே
நாவாய் உறைகின்ற – திருநாவாயிலே வர்த்திக்கிற
என் நாரணநம்பீ – எனது நாராயணமூர்த்தியே
ஆஆ – ஐயோ
இவன் அடியான் என்று அருளாய் – இவன் நமக்கு அடியவனன்றோவென்று க்ருபை பண்ணி யருள வேணும்

விளக்க உரை

திருநாவாயிலே நித்யவாஸம் பண்ணியருளாநின்ற தேவரீர் அடியேனுடைய அநந்யகதித்வத்தைக் கண்டு அருள் செய்தருளவேணுமென்கிறார். (கோவாகியமாவலிமை நிலங்கொண்டாய்) ஸர்வேச்வரன் இந்ததிரனை த்ரிலோகாதிபதியாக்கி வைத்தான்; அவனைத் தள்ளி அந்தப் பதவியைத் தான் கொள்ளை கொண்டு 'நானே அரசு' என்றிருந்தானாயிற்று மாவலி. அவன்றான் ஔதார்யமென்று ஒரு மஹாகுணமுடையவனாயிருந்த படியாலே'' அதுவே பற்றாசாகத் தான் இரப்பாளனாய் நின்று வெகு சாதுரியமாகக் காரியத்தை முடித்தானாயிற்று எம்பெருமான் (தேவாசுரஞ் செற்றவனே) தேவாஸீரயுத்தத்திலே பரஸ்பரவதமேயாய்ச் செல்லா நிற்க, அநுகூலரான தேவர்களுக்காக அஸுரரை யழியச் செய்வதவனே! என்றபடி, (திருமாலே!) விரோதிகளை யழித்து அடியார்களைக் காத்தருள்வதற்கு ஹேது பிராட்டியோ டுண்டான சேர்த்தியென்று தெரிவித்தவாறு. இப்படிப்பட்ட திருக்குணங்கள் திருநாவாயிலே ப்ரத்யக்ஷிக்கலாம்படி யிருக்கின்றமையைக் காட்டுகின்றது மூன்றாமடி,. என்னுடைய அநந்ய கதித்வத்தையே நோக்கி க்ருமை செய்தருளவேணுமென்கிறார் ஈற்றடியால்.

English Translation

You took the Earth, from Bali king. O Tirumal, Lord of the gods, my friend living in Tirunavai! Take me as your servant

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்