விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்டே களிக்கின்றது*  இங்குஎன்று கொல்கண்கள்* 
    தொண்டேஉனக்காய் ஒழிந்தேன்*  துரிசுஇன்றி*
    வண்டுஆர்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்*  
    கொண்டே உறைகின்ற*  எம்கோவலர்கோவே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வண்டு ஆர் சோலைகள் சூழ் மலர் திருநாவாய் – வண்டுகள் நிறைந்த மலரையுடைய சோலைகள் சூழ்ந்த திருநாவாயை
கொண்டு உறைகின்ற – உகங்தவிடமாகத் திருவுள்ளம்பற்றி வர்த்திக்கிற
எம் கோவலர் கோவே – எம் கோபாலகிருஷ்ணனே!
துரிசு இன்றி உனக்கே தொண்டு ஆய் ஒழிந்தேன் – க்ருத்திமமில்லாமல் உனக்கே தொண்டனாய்விட்டேன்
கண்கள் – எனது கண்களானவை

விளக்க உரை

எனக்காகத் திருநாவாயைக் கோயிலாகக் கொண்டு உறைகின்ற கோவலர்கோவே! உன்பக்கலிலே அநந்ய ப்ரயோஜனமான அன்மையுடையேனான வென்னுடைய கண்களின் விடாய் சொல்லத் தரமன்று; என்பசி தீராவிட்டாலும் என் கண்களின் பசி தீர்ந்தால் போதுமேயென்கிறார் ; உலகில் யாசிப்பவர்களே 'என் பசி கிடக்கட்டும்; என் குழந்தை படுகிறபாடு பாருங்கள் ; அதன் பசியை முன்னம் தீர்த்தால் போதும்' என்பர்கேள ; அது போலச் சொல்லுகிறபடி. (துரிசின்றி உனக்கே தொண்டா யொழிந்தேன்) உள்ளே ஒரு எண்ணமும் வெளியே மற்றோரெண்ணமுமாக இருக்கு மிருப்பு துரிசு எனப்படும் ; அதாவது க்ருத்திமம் ; அஃதின்றிக்கே உனக்கே தொண்டா யொழிந்தேனென்கிறார்.

English Translation

My Lord! King of the cowherd-clan, now living inTirunavali! O When will my eyes see you here and rejoice in pure love?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்