விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மணாளன் மலர்மங்கைக்கும்*  மண் மடந்தைக்கும்* 
    கண்ணாளன் உலகத்துஉயிர்*  தேவர்கட்குஎல்லாம்*
    விண்ணாளன் விரும்பிஉறையும்*  திருநாவாய்* 
    கண்ஆரக் களிக்கின்றது*  இங்குஎன்று கொல்கண்டே?  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மலர்மங்கைக்கும் – பெரிய பிராட்டியாருக்கும்
மண் மடந்தைக்கும் – பூமிப் பிராட்டிக்கும்
மணாளன் – மணயாளனாய்
உலகத்து உயிர் தேவர் கட்கு எல்லாம் கண்ணாளன் – மண்ணுலகத்ததவர்க்கும் விண்ணுலகத்தவர்க்கு மெல்லாம் நிர்வாஹகனாய்
வீண் ஆளன்  – பரமபதத்திலுள்ளாவைரயும் அடிமை கொள்ளுபவனான ஸர்வேச்வரன்

விளக்க உரை

என் கண்களின் விடாய்தீரத் திருநாவாயைக் கண்டு அநுபவிக்கப்பெறுவது என்றைக்கோ வென்கிறார். மலர் மங்கைக்கும் மண்மடந்தைக்கும் மணாளன்–பெரிய பிராட்டியார்க்கும் பூமிப் பிராட்டியாருக்கும் வல்லபனானாவன். ஒருத்தி புருஷகாரத்திலே ஊன்றியிருப்பள் மற்றொருத்தி பொறுமைதானே வடிவெடுத்தவளாயிருப்பன். இப்படிப்பட்ட இருவரும் அருகேயிருக்க, நான் இழக்கத் தகுமோ வென்றபடி. உலகத்துயிர் தேவர்கட்கெல்லாம் கண்ணாளன–மண்ணுலகிலுள்ள மனிசர்களென்ன, விண்ணுலகிலுள்ள தேவர்களென்ன ஆகிய அனைவர்க்கும் நிர்வாஹகன். உபயவிபூதி நாதனானவனுக்கு நாளொருவான் புறம்புபட்டேனோவென்பது கருத்து. விணணுளன் விரும்பிறையும் திருநாவாய்=பிராட்டிமாரும் தானும் தனக்குத் தகுதியான பரமபதத்தில் திவ்ய பர்யங்கத்திலேயிருந்து நித்ய *ரிகளை நிர்வஹிக்கிறவன் பெறாப்பேறாக ஆதரித்து வர்த்திக்கிற திவ்ய தேசமன்றோ திருநாவாய்; இதனைக் காண்கையிலே விடாய்ப்பட்ட கண்கள் வயிறு நிறையக் கண்டு களிப்பது எந்நாளோ? என்கிறார்.

English Translation

The spouse of lotus-dame and Earth Dame, door as eyes to the gods and men has made his home in Tirunavai. O, when will these eyes feast on him?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்