விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாளேல் அறியேன்*  எனக்குஉள்ளன*  நானும் 
    மீளா அடிமைப்*  பணி செய்யப் புகுந்தேன்*
    நீள்ஆர்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்* 
    வாள்ஏய் தடம்கண்*  மடப்பின்னை மணாளா!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வாள் ஏய் தட கண் – வாள் போன்ற பெரிய கண்களையுடையளாய்
மட பின்னை மணாளா – நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபனானவனே!
நானும – அடியேனும்
மீளா அடிமை பணி செய்ய புகுந்தேன் – இடையறாத நித்ய கைங்கரியத்திலே நிரதனானேன்.
எனக்கு உள்ளன நான் அறியேன் – அறுக்கு எனக்கு நீ ஸங்கல் பித்துவைத்த நான் அறிகின்றிலேன்.

விளக்க உரை

ஆத்மாவுள்ளவரையில் கைங்கரியம் பண்ணும்படி விஷயீகரிக்கப்பெற்ற நான் திருநாவாயில் நம்பின்னைப் பிராட்டியோடே கூடவிருக்கிற இருப்பிலே அடிமை செய்ப்பெறும் நாள் என்றோ! அறிகிலேன் என்கிறார். நாளேலயியே னெனக்குள்ளன=நாள் பிநிந்து துக்கப்பட வேண்டிய நாள் இன்னுமெத்தனை நாளுண்டென்று அறிகின்றிலேன் என்றும், அனுபவிக்கப் பெறும் நாள் என்னைக்கென்று அறிகின்றிலேன் என்றும் இரண்டு வகையும் பொருள் கொள்ளலாம். நானும் மீளாவடிமைப் பணி செய்யப் புகுந்தேன்=நித்ய ஸுரிகள் பண்ணும் யாவதாத்மபாவியான கைங்கரித்திலேயன்றோ நானும் அந்வயித்திருப்பது. நீளார் மலர்ச்சோலைகள் சூழ் திருநாவாய்= கைங்கரியம் பண்ணுகைக்குப் புஷ்பம் முதலிய உபகரணங்களினால் குறையொன்று மின்றிக்கே யிருக்கிற திவ்ய தேச மென்றபடி. இத்திருவாய்மொழியில் பிராட்டி ஸம்பந்தம் அடிக்கடி அநுஸந்திக்கப்படுகிறது; அதற்குக் காரணமருளிச் செய்கிறார் நம்பிள்ளை–"தேசாந்தரம்போன ப்ரஜை ஊர் அணித்தானவாறே தாய்மாரைப் பலகால் நினைக்குமாபோலே, ப்ராப்யதேசம் அணித்தானவாறே திரளவும் தனித்தனியும் பிராட்டிமாரை யநுஸந்திக்கிறார்" என்று.

English Translation

O Lord of Vel-eyed Nappinnai in Tirunavai amid groves! I know not how long I must stay here doing deeds of no return

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்