விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எவைகொல் அணுகப் பெறும்நாள்?'*  என்று எப்போதும்* 
    கவையில் மனம்இன்றி*  கண்ணீர்கள் கலுழ்வன்* 
    நவைஇல் திருநாரணன்சேர்*  திருநாவாய்*  
    அவையுள் புகலாவதுஓர்*  நாள் அறியேனே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அணுக பெறுநாள் எவை கொள்ல என்று – கிட்டப்பெறும் நான் எந்நாளோ வென்று
எப்போதும் – எக்காலத்திலும்
சுவையில் மனம் இன்றி – இரட்டைப்பட்ட நெஞ்சின்றிக்கே ஏகாக்ரசித் தனாய் கொண்டு
கண் நீர்கள் கலுழ்வன் – கண்ணநீர் பெருவெள்ளம் நிற்பேன்
நவை இல் திரு நாரணன் சேர் – ஹேயப்ரத்யநீகளான திருமால் வர்த்திக்கிற

விளக்க உரை

திருநாவாயில் மஹா கோஷ்டியிலே சென்று சேர்ந்து அநுபவிக்கும் நாள் எதுவோ? அறிகிறிலேன் என்று அலமருகின்றார். நான் வந்து கிட்டப்பெறும் நாள் எதுவோ வென்று இதையே எப்போதுஞ் சொல்லிக் கண்ணீர் சோரவிருக்கின்றேன். துர்லபத்வம் முதலான தோஷங்களின்றிக்கே திருநாவாயிலே வந்து ஸீலப்னான ஸ்ரீமந் நாராயணன் அங்குப் பெரிய திருவோலக்கமாக இருக்க அத்திரளிலேசென்று கூடப்பெறாமலிக்க என்னாலாகுமோ? அடியார்கள் குழாங்களை யுடன் கூடுவதென்று கொலோ என்று ஆசைப்பட்ட நான் அத்திரளிலே சென்று கூடப் பெறாதிருப்பது தருமோ? என்றாராயிற்று. (கவையில் மனமின்றி) கவையிலேயோன மன மின்றிக்கே–இருதலைப்பட்ட நெஞ்சின்றிக்கே யென்றபடி. ஏகாதரசித்தனாய் கொண்டு என்பது தாற்பரியம். இரட்டைப்பட்டிருப்பதற்குச் சுவை யென்று பெயர்; "சுவை நாவரவினனைப் பள்ளியின்மேல்" என்றார் திருமங்கையாழ்வாரும். கலுழ்வன்–வெள்ளமிட நிற்பேன் என்றபடி.

English Translation

I weep with thoughts of nothing except when I will reach him in Tirunavai where he resides in good company perfectly

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்