விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொடிஏர்இடைக்*  கோகனகத்தவள் கேள்வன்* 
    வடிவேல் தடம்கண்*  மடப்பின்னை மணாளன்*
    நெடியான்உறை சோலைகள்சூழ்*  திருநாவாய்*  
    அடியேன் அணுகப்பெறும்நாள்*  எவைகொலோ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொடி ஏர் இடை – கொடிபோலாகிய இடையையுடையனாய்
கோகனகத்தவன் – தாமரையாளான பிராட்டிக்கு
கேள்வன் – வல்லபனாய்
வடிவேல் தட கண் மட பின்னை மணாளன் – உரிய வேல் போன்ற பெரிய எண்களை யுடைய அழகிய கப்பின்னைப் பிராட்டிக்கு மணவாளனாய்
நெடியான் – மஹா புருஷனானவன்

விளக்க உரை

பெரிய பிராட்டியாரோடும் நப்பின்னைப் பிராட்டியாரோடுங் கூட அவன் எழுந்தருளியிருக்கிற திருநாவாயிலே போய்ப்புகுவது என்றைக்கோ வென்கிறார். கொடி போன்றழகிய இடையை யுடையளாய், தாமரைப் பூவிற் பரிமளம் உபாதானமாகப் பிறந்தவனான பிராட்டிக்கு வல்லபன்; கூரிய வேல் போன்றழகிய கண்ணையுடையளான நப்பிள்ளைப் பிராட்டிக்கு மணவாளன். இவ்விரண்டு விசேஷணங்களின் கருத்து–புருஷகாரம் செய்து சேர்ப்பிக்கவல்லவர்கள் அருகேயிருக்கச் செய்தேயும் நான் இழக்கலாமோ என்பதாம்.

English Translation

The Lord in Tirunavai is spouse of lotus-dame Lakshmi, and Vel-eyed slender Nappinnai. Oh! When will I attain him?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்