விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அறுக்கும் வினையாயின*  ஆகத்து அவனை* 
    நிறுத்தும் மனத்துஒன்றிய*  சிந்தையினார்க்கு*
    வெறித்தண்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்* 
    குறுக்கும்வகை உண்டுகொலோ*  கொடியேற்கே?  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சிறுத்தும் மனத்து ஒன்றிய – நிலைநிறுத்தி வைத்துக்கொள்ள வேணுமென்கிற கருத்திலே ஒருமைப்பாடுடைய
சிந்தையினார்க்கு – மநோரதத்தையுடைய பக்தர்களுக்கு
வினை ஆயின அறுக்கும் – அநுபவ விரோதிகளையெல்லாம் போக்கக் கடலதாய்
வெறி தண் மலர் – ஈறு மணம்மிக்குக் குளிர்ந்த புஷ்பங்களை கொண்ட
சோலைகள் சூழ் – சோலைகளாலே சூழப்பட்டதான

விளக்க உரை

திருநாவாய்த் திருப்பதி எனக்கு ஸமீபஸ்தாகைக்கு உபாயமுண்டோவென்கிறார் அறுக்கும் விளையாயின=வினை அறுக்கும் என்னாமல வினையாயின அறுக்கும் என்றது–விரோதியென்று பேர்பெற்றவை யடங்கலும் போக்கும் என்றபடி. ஸ்வரூப விரோதியென்றும் உபாய விரோயென்றும் இபேயவிரோதியென்றும் மூன்று விரோதிகள் திருமந்த் தார்த்த நிர்வாத்தில் தெரிவதுண்டே. இவ்வளவுயுமன்றே விரோதிகள்; இப்போதுள்ள தேஹத்தளவிலே முடியாமல் ப்ராரப்தசேஷமாய்க் கொண்டு அப்பாலும் செல்லக்கூடிய விரோதிகளுமுண்டே; ஆக எல்லாவன விரோதிகளையுமறுக்குமென்றபடி,. இப்படி வினைகளை நறுப்பது ஆர்க்குர் என்னில்; அவனை ஆகத்து நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு=ஹருதயத்திலே அவனை நிலைநிறுத்த வேணுமென்னும் அத்யவஸாயத்திலே ஒருமைப்பட்ட மநோகதத்தையுடையவர்களுக்கு. விரோதிகளைப் போக்குவது மாத்திரமன்றிக்கே பரம போக்யமுமானது என்கிறார் மூன்றாமடியினால். விளையைப் போக்காதே வளரச்செய்தாலும் விடவொண்ணாதபடி போக்யதை மிகுந்த திவ்யதேசம் திருநாவாய். குறுக்கும் வகையுண்டு கொலோ=திருநாவாய்ப் பதியை ஸமிபஸ்தமாம்படி செய்யுமுபாயமுண்டோ? என்று பொருள் கொள்ளலாமாயினும், திருநாவாய்ப்பதியானது ஸபிக்கும்படியான உபாயமுண்டோ வென்று பொருள் கொள்வது பொருந்தும். குறுகும் வகையென்பது குறுக்கும் வகையென்று தேச பாஷைக்குச் சேரக் கிடக்கிறது. எம்பெருமானார் மலைநாட்டுத் திருப்பதி யாத்திரையாக எழுந்தருளாநிற்கையில் திருநாவாய் ஸமீபத்திலே யெழுந்தருளும்போது எதிரே வந்து கொண்டிருந்த மலையாளர்களை நோக்கி 'திருநாவாய் எவ்வளவுதூரமுண்டு' என்று கேட்க, அவர்கள் 'குறுக்கும்' என்றார்களாம். [தமிழ்ப் பாஷையில் குறுகுமென்பது மலையாள பாஷையில் குறுக்குமென்று கிடக்கிறது. ஸமீபத்தில்தானுள்ளது–என்று பொருள்] எம்பெருமானார் அதுகேட்டு 'இப்பாஷையாலே அருளிச் செய்வதே ஆழ்வார்' என்று ஈடு பட்டாராம்.

English Translation

For those who keep him in their hearts, and contemplate on him, the Lord in Tirunavai effaces karmas. Alas! How can I reach him?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்