விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தகவுஅன்றுஎன்று உரையீர்கள்*  தடம்புனல்வாய் இரைதேர்ந்து* 
    மிகஇன்பம் படமேவும்*  மேல்நடைய அன்னங்காள்*
    மிகமேனி மெலிவுஎய்தி*  மேகலையும் ஈடுஅழிந்து*  என் 
    அகமேனி ஒழியாமே*  திருமூழிக் களத்தார்க்கே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தடபுனல் வாய் – விசாலமான நீர்நிலங்களிலே
இரை தேர்ந்து – இரை தேடிக்கொண்டு
மிக இன்பம் பட மெவும் – பேரானந்தமாகச் சேர்ந்து வாழ்கிற
மெல நடைய அன்னங்காள் – மெல்லிய நடையையுடைய அன்னங்களே
மேனி மிக மெலிவு எய்தி – சரீரம் மிகவும் மெலிவடைந்து

விளக்க உரை

நான் முடிவதற்கு முன்னே என்னிலைமையைத் திருமூழிக்களத்தெம்பெருமானுக்கு உரையீரென்று சில அன்னங்களையிரக்கிறாள். தகவன்றென்று உரையீர்கள்–மருமதத்தில் பொற்றும்படியான வார்த்தை இதுதானென்று ஆழ்வார் திருவுள்ளம். கருணையையே நிரூபகமாகக் கொண்டு அருளாளனென்றும் பேரருளாளனென்றும் விருதுசுமந்து திரிகிற அவர்க்குக் கருணையில்லை யென்னுங்கோ ளென்கிறாள். 'தகஜவ இல்லை' என்னாதே 'தகவு அன்று ' என்கையாலே–அவரிடத்திலே கருணை இல்லை யென்னப்போகாது; கடலில் நீர் வற்றிற்று என்னவொண்ணாதப்பாலே அருட்கடலான அவரிடத்திலே கருணைவற்றிற்று என்னலாகாது; நீர் செய்வது கருணையின் காரியமன்று என்னுங்கோள்–என்கிறாளென்றுங் கொள்ளலாம். எந்த அன்னங்களைக் குறித்துச் சொல்லுகிறோளோ அந்த அன்னங்களை "தடம் புனல் வாயிரைதேர்ந்து மிகவின்பம்படமேவும் மென்னடைய" என்று விசேஷிக்கிறாள். இதனால் மஹாசாரியர்களே இங்கு அன்னமாக விளிக்கப்படுகிறார்களென்பது தெரியவரும். தங்களுக்குப் பரம போக்யமான அர்த்தங்களைத் தேடுவதிலேயே நோக்குடையவர்களும் அதுவே பேரின்பமாக விருப்பவர்களும் நல்ல நடத்தையை யுடையவர்களுமாயிருப்பவர்களை விளித்தபடி. தன்னுடைய இருப்பைச் சொல்லுகிறாள் மூன்றாமடியில்; உடம்புமிக மெலிந்து அரையில் துணியும் தங்காதபடியன்றோ நானிருப்பது. என் அகமேனியொழியாமே–இதற்கு 'உரையீர்கள்' என்பதனோடே அந்வயம். 'என் அகமேனியொழியாதே யீர்கள்' –அவனுக்கு அந்தரங்கரீரமாயிருக்கிற நான் வழிவதற்கு முன்னே உரையீர்கள் என்றபடி,. ஸகலாத்மாக்களும் எம்பெருமானுக்கு வீரமாயிரக்கச் செய்தேயும். ஆழ்வார் விசேஷித்து அவனுக்கு அந்தரங்காரீரமாகையாலே அகமெனி எனப்பட்டது. என் அகமேனி யென்றது–அப்பெருமானுக்கு அந்தரங்கரீரமாயிருக்கின்ற என்னாத்ம ஸ்வரூபம் என்றபடி.

English Translation

O Soft-gaited swan-pair feeding my lake! You enjoy amorous company; my Lord is in Tirumulikkalam. My body has become thin, my waistband has slipped, my life is departing. Go tell him, this is not right

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்