விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பூந்துழாய் முடியார்க்கு*  பொன்ஆழிக் கையாருக்கு* 
    ஏந்துநீர் இளம்குருகே!*  திருமூழிக்களத்தாருக்கு*
    ஏந்துபூண் முலைபயந்து*  என்இணைமலர்க்கண் நீர்ததும்ப* 
    தாம்தம்மைக் கொண்டுஅகல்தல்*  தகவுஅன்றுஎன்று உரையீரே   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நீர் ஏந்து இள குருகே – நீராலே யேந்தப்படுகிற இளங்குருகே
பூ துழாய் முடியார்க்கு – திருத்துழாயைத் திருமுடியிலே அணிந்துள்ளவரும்
பொள் ஆழி கையாருக்கு – அழகிய திருவாழியைக் கையிலேயுடையவரும்
திருமூழிக்களத் தாருக்கு – திருமூழிக்களத்தில் வாழ்பவருமான பெரியவர்க்கு
பூண் ஏந்து முலை பயந்து – ஆபரணமணிந்த முலைகள் வைவர்ணிய மடைந்து

விளக்க உரை

எம்பெருமானுடைய வடிவழகுதான் நினைக்க நினைக்க ஆழ்வாரை யுருக்குகின்றதென்னுமிடம் நன்கு தெரிவிக்கப்படுகிறது இப்பாட்டில். "தாம் தம்மைக் கொண்டகல்தல் தகவன்றென்றுரையீரை" எனகிற [ஈற்றடி] வார்த்தை மிகவியத்தக்கது; எம்பெருமான் என்னைவிட்டுப் பிரிந்து போம்போது தன்னுடைய திருமேனியை இங்கு வைத்திட்டன்றோ போயிருக்கவேண்டும்; அந்தத் திருமேனியையுங்கொண்டு அகன்று போனாரே, இது தகவேலவென்று கேளுங்கோளென்று குருகினங்களை நோக்கிக் கூறுகின்றாள். உலகில் விநோதமாகப் பேசுகிறவர்கள் "நடந்தால் உடலும் கூடக்கூட வருகிறது, இதுதான் எனக்குப்பெரிய வியாதி" என்று சொலுவதுண்டு ; இதுவொரு ஹாதஸ்பவசன்மாகக் கொள்ளப்படுகிறது. இந்த முறையில்தானுள்ளது இங்கு ஆழ்வாருடைய வாசகமும். 'தாம் போகவேணுமானால் தம்மை வைத்துவிட்டுப் போகவேண்டாவோ' என்கிற இவ்வார்த்தையின் கருத்து இவ்வளவே–அவர் இறைப்பொழுதும் பிரிந்துபோகவேதகாது என்பதாம்; அவருடைய பிரிவு ஆற்றவொண்ணாததென்பதை முதலடியால் முதலிக்கிறார்; பூந்துழாய் முடியார்க்குப் பொன்னாழிக்கையாருக்கு=அவர் திருமுடியிலே திருத்துழாய் மாலை சாத்திக்கொண்டிருக்குமழகு ஒன்றுபோதுமே; அதற்குமேல் கையுந்திருவாழியுமானவழகு "சுடராழியும் பல்லாண்டு" என்று ஆலத்திவழிக்க வேண்டும்படியன்றோவுள்ளது; இவ்வழகுகளை நினைத்தன்றோ நான் வைவர்ணியமடைந்தும் கண்ணீர் சோர்ந்தும் நிற்பது; இந்நிலையைச் சென்று சொல்லவேணுமென்றாளாயிற்று.

English Translation

O Tender water-egret! The Lord wears a Tulasi crown and wields a golden discus in Tirumulikkalam, My jewel-worthy breasts have paled, tears flood my lotus eyes. Tell him that his keeping away from me is just not right

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்