விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சுடர்வளையும் கலையும்கொண்டு*  அருவினையேன் தோள்துறந்த*  
    படர்புகழான்*  திருமூழிக்களத்துஉறையும் பங்கயக்கண்* 
    சுடர்பவள வாயனைக்கண்டு*  ஒருநாள் ஓர்தூய்மாற்றம்*  
    படர்பொழில்வாய்க் குருகுஇனங்காள்!*  எனக்கு ஒன்று பணியீரே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

படர் பொழில்வாய் குருகு இனங்காள் – பரந்து சோலையகத்தே வாழ்கிற குயிலினங்களே
சுடர் வளையும் கலையும் கொண்டு – (எனது) அழகிய கைவளையையும் சேலையையும் கைக்கொண்டு
அருவினையேன் தோள் துறந்த – போக்கவரிய பாவஞ்செய்த என்னை விட்டுப்பிரிந்த
படர் புகழான் – பரந்த புகழையுடையவனும்
பங்கயம் கண் – செந்தாமரைக்கண்ணனும்

விளக்க உரை

சில குருகினங்களைக் குறித்துச் சொல்லுகிறாள்–எம் பெருமானைக்கண்டு, நீர் சிலரோடே கலந்து அவர்களைத் துறந்து அதுவே புகழாக வீற்றிருக்குமிவ்விருப்பு தருமோமென்று சொல்லுங்கோள் என்கிறாள். சுடர் வளையுங்கலையுங்கொண்டு அருவினையேன் தோற்துறந்த படர்புகழான் என்கையாலே – அடியார்களை இப்பாடு படுத்துவதையே தனக்குப் பெரும்புகழாக நினைத்திருப்பவர் என்றதாகிறது. தன்பாலீடுபட்டவர்களை மற்றொன்றுக்கு ஆகாதபடியாக்கிக் கொள்ளுகைதானே எம்பெருமானுக்குப் படர்புகழ். இப்புகழோடே திருமூழிக்களத்திலுறையும் பெருமான் பங்கயக்கண்சுடர் பவளவாயன்–இவ்வழகையநுபவித்தவன் பிரிந்து ஆறியிருப்பளோவென்று சொல்ல வேணுமென்பது கருத்து.

English Translation

O Forest hens! The infamous Lord of lotus eyes and coal lips who left my ill fated arms and took my silk and jewels with him resides in Tirumulikkalam, Se him one day and speak a good word in my behalf

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்