விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தூதுஉரைத்தல் செப்புமின்கள்*  தூமொழிவாய் வண்டுஇனங்காள்*  
    போதுஇரைத்து மதுநுகரும்*  பொழில் மூழிக்களத்துஉறையும்* 
    மாதரைத்தம் மார்வகத்தே*  வைத்தார்க்கு என்வாய்மாற்றம்*  
    தூதுஉரைத்தல் செப்புதிரேல்*  சுடர்வளையும் கலையுமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தம்மார்வகத்தே மாதரை வைத்தார்க்கு – தமது திருமார்பிலே பிராட்டியைத்தாக்கி நிற்பவராய் பெரியவர்க்கு
என்வாய் மாற்றம் – என் வாய்ப்பாசுரமான
தூது உரைத்தல் செப்புதீர் எல் – தூது வாக்யத்தைச் சொல்லப்  பார்த்தீர்களாகில்
சுடர் வளையும் கனையும் – (எனது) அழகிய கைவனைகளையும் சேலையையும் பற்றி
தூது உரைத்தல் செப்பு மின்கள் – தூதுக்குப் பாசுரமாகச் சொல்லுங்கோள்

விளக்க உரை

சில வண்டுகளைக் குறித்துச் சொல்லுகிறாள்–எம்பெருமான் பகலிலே சென்று விண்ணப்பஞ்செய்யுமிடத்து உங்கள் வார்த்தை விலைச் செல்லும்படி பிராட்டி ஸன்னதியிலே வைத்துச் சொல்லுங்கோள் என்று. 'தூதுரைத்து மறுமாற்றம் கொண்டு வாருங்கள்' என்னாமல் "தூதுரைத்தல் செப்புமின்கள்" என்று இவ்வளவே சொல்லுகையாலே "என்" தூதவாக்யத்தையறிவித்தால் போதும், "ரக்ஷாபேக்ஷாம் ப்ரதீக்ஷதேயென்றிருப்பவர்க்கு இவ்வளவே போதும்" என்று காட்டப்பட்டதாம் தூமொழிவாய் வண்டினங்காள் ! =இனிய பேச்சாலே எம்பெருமானையும் வசப்படுத்திக் கொள்ள வல்லவர்கள் ஆசார்யர்கள் என்பது காட்டப்பட்டது. எம்பெருமானுறையும் திருமூழிக்களம் எப்படிப்பட்டதென்ன, போதிரைத்து மது நுகரும்பொழில்களை யுடையது என்கிறார்; புஷ்பவிகாஸதசையில் ஹர்ஷத்தாலே கோலாஹலம் பண்ணிக் கொண்டு உங்களுக்கு மதுபானம் பண்ணலாம்படியான சோலைகளையுடையது என்றபடி. என் காரியத்திற்காகவே நீங்கள் போகவேண்டா; போமிடத்தில் உங்கள், காரியமும் ஸித்திக்குமென்று காட்டுகிறவிதனால்–ஆசாரியர்களுக்கு சிஷ்யோஜ்ஜீவனக்ருத்யம் ஸ்வார்த்தமேயொழிய பரார்த்தமன்று என்பது காட்டப்பட்டதாம். மாதரைத் தம் மார்வகத்தே வைத்தார்க்கு=நீங்கள் சொல்லுமளவே வேண்டுவது; உங்கள் வார்த்தையைக் கேட்டுக்கொண்டிருக்கவும், கேட்டுக் கொண்டாடுகைக்கும் அருகே புருஷகாரஸம்பத்தில் குறையில்லை யென்றடி. தூதுரைத்தல்செப்புதிரேல் சுடர்வளையும் கலையுமே=இதற்கு இரண்டு படியாகப் பொருள் நிர்வஹிப்பர்; நீங்கள் தூதுவிண்ணப்பம் செய்வதானால் எது விஷயமாகச் சொல்ல வேணும் தெரியுமோ? என்னுடைய கைவளையையும் சேலையையும் பற்றிச் சொல்லுங்கோள்– இவை சிதிலமானபடியைச் சொல்லுங்கோள் என்பதாக வொரு நிர்வாணம். நீங்கள் தூது சொன்ன மாத்திரத்திலே எனக்குக் கைவளையும் சேலையும் ஆம்–நான் பேறு பெற்றேனாவேன் என்பதாக மற்றொரு நிர்வாஹம்.

English Translation

O Sweet-lipped bumble-bees! Go as my messengers to the Lord who keeps his dame on his chest, in Tirumulkkalam surrounded by nectar-dripping flower groves. Repeat my worlds, "Radiant jewels and silk clothes", to him

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்