விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தெளிவிசும்பு கடிதுஓடி*  தீவளைத்து மின்இலகும்* 
    ஒளிமுகில்காள்!*  திருமூழிக்களத்துஉறையும் ஒண்சுடர்க்கு*
    தெளிவிசும்பு திருநாடாத்*  தீவினையேன் மனத்துஉறையும்* 
    துளிவார்கள்குழலார்க்கு*  என்தூதுஉரைத்தல் செப்புமினே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தெளிவிசும்பு கடிது ஒடி – நிர்மலமான ஆகாசத்திலே விரைந்து பறந்து சென்று
தீ வளைத்துமின் இலகும் – கொள்ளி வட்டம் போலே அழகிய மின் விளங்கப்பெற்ற
ஒளி முகில்காள் – அழகிய மேகங்களே
திரு மூழிக்களத்து உறையும் – திருமூழிக்களத்தில் நித்யவாஸஞ் செய்தருள்கின்ற
ஒண் சுடர்க்கு – அழகிய தேஜோராசியாயும்

விளக்க உரை

இப்பாட்டும் மேகவிடுதூது, பரமபதத்திற்பண்ணுமாதரத்தை என் பக்கலிலே பண்ணினவரன்றோ அவர்; உங்கள் வார்த்தை கேட்டவாறே பதறியோடி வருவர்; எனக்காக வொருவார்த்தை விண்ணப்பஞ்செய்யுங்கோளென்று பின்னையும் மேகங்களை யிரக்கிறாள் ஆறாயிரப்படியருளிசெயல் காணமின்–"அவளுக்கருளி ரென்னவமையுமோ? இன்னாருக்கருளீரென்ன வேண்டாவோ வென்னில், யாவவொருத்தியுடைய நெஞ்சை உமக்குத் திருநாடாகக் கொண்டு நீர் உறைகிறீர் அவளுக்கு அருளீரென்று சொல்லிகோளென்கிறாள்" என்று. தெளிவிசும்புகடிதோடித் தீ வளைத்து மின்னலக்கு மொளிமுகல்காள்!= ஆகாசத்திலே வேகமாக ஸஞ்சரிக்கையும், கொள்ளிவட்டம்போல மின்னல் விளங்கப்பெறுகையும் மேங்களுக்கு இயல்பு. ஆசாரியகளை மேகமாக விலக்ஷிக்கையாலே அவர்களிடத்தும் இந்த விசேஷணம் பொருந்தும். ஆசாரியர்களுக்கு லீலாவிபூதி, நித்யவிபூதின்று ஒரு வாசியின்றி உபயவிபூதியும் ஒரு நீராயிருந்து இங்குப்போல அங்கும் ஸஞ்சரிக்க வல்லமையுண்டாதலால் அதையிட்டுத் தெளிவிசும்புகடி தோடுகை சொல்லிற்று. மேகத்தில் மின்மின்னுவது எப்போதும் கிடையாது; நன்றாக மழை பெய்ய நிற்கும் ஸமயத்தில்தான் மின்மின்னும். தீ வளைத்து மின்னிலகுமென்றதனால் வர்ஷிக்கஸித்தமாயிருக்கிற மேகங்களென்று காட்டப்பட்டு, மஹார்த்தங்களை வர்ஷிக்க ஸஜ்ஜர்களாயிருக்கு மாசாரியர்கள் காட்டப்பட்டாராயினர். மேகங்களை விளிக்கிறதபோது ஒளிமுகில்காள்! என்று விளித்து, எம்பெருமானையும் ஒண்சுடர் என்ற சொல்லால் இங்குச் சொல்லியிருக்கையாலே, ஆசாரியர்கள் எம்பெருமானிற் காட்டில் வேறு பட்டவர்களல்லர் என்பதும், அவனோடு பரம ஸாம்யம் பெற்றவர்களே யென்பதும் தெரிவிக்கப்பட்டதாம். பரமபதத்திலே பண்ணும் வியாமோஹத்தை ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே பண்ணி எம்பெருமான் வர்த்திக்கிறானென்பது மூன்றாமடியின் கருத்து. இங்குத் தீவினையேன் என்றது–நெஞ்சிலே விளங்கா நிற்கவும் காணபாட்டாதபடி பாபத்தைப் பண்ணினேனே யென்று நொந்து சொல்லுகிறபடி. (துளிவார்கட் குழலார்க்கு என்தூதுரைத்தல் செப்புமினே) திருமுடியிலே மாலை சாத்தியிருப்பவர்க்கு என்கையாலே ரக்ஷண தீக்ஷிதர் என்பது காட்டபட்டது. ஆர்த்தரக்ஷணத்திற்கென்று தனிமாலையிட்டிருக்கு மெம்பெருமானுக்கு என் விண்ணப்பத்தைத் தெரிவிக்க வேமென்றதாயிற்று.

English Translation

O Radiant clouds spinning in the sky with a fiery lightning hoop! The heart of this wicked self is the Vaikunta of the radiant Lord who resides in Tirumulikkalam, Convey this to my Lord, whose coiffure drips with nectar

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்