விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திருமேனி அடிகளுக்குத்*  தீவினையேன் விடுதூதாய்* 
    திருமூழிக்களம் என்னும்*  செழுநகர்வாய் அணிமுகில்காள்*
    திருமேனி அவட்குஅருளீர்*  என்றக்கால் உம்மைத்தன்* 
    திருமேனி ஒளிஅகற்றி*  தெளிவிசும்பு கடியுமே?   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தீ வினையேன் விடு தூது ஆய் – பாபியான நான் விடுகிற தூதாய்ச் சென்று
அவட்கு திருமேனி அருளீர் என்றக்கால் – பராங்குச நாயகிக்கு உமது திரு மேனியைக் கொடுத்தருளீர் என்று ஒரு வார்த்தை சொன்னால்
உம்மை – இவ்வுபகாரம் செய்கிற உங்களை
தம் திருமேனி ஒளி அகற்றி – உங்கள் வடிவிலுள்ள புகாரை மாற்றி
தெளி விசும்பு கடியுமே – நிர்மலமான ஆகாசத்தில் நீங்கள் வர்த்திக்கமுடியாதபடி  தண்டிப்பரோ

விளக்க உரை

சில மேகங்களை நோக்கி 'என் வார்த்தையை அவனுக்குச் சொன்னால் உங்களுக்கு ஏதேனும் தண்டனை நேருமோ?' என்கிறாள். எம்பெருமானுக்குத் திருமேனி யடிகளென்ற ஒரு திருநாமஞ் சாத்துகிறாராயிற்று ஆழ்வார். வடிவழகையே நிரூபகமாகக் கொண்ட ஸர்வஸ்வாமி யென்று பொருள். ஸ்வரூபகுண சேஷ்டிதங்களினால் ஜகத்தையடையத் தோற்பிக்குமது ஒருபுறமிக்க, வடிவழகாலே தோற்பித்து அடிமை கொள்வது தலையாயிருக்கையாலே திருமேனியடிகள் என்கிறார். "அவசா ப்ரதிபேதிரே என்கிறபடியே ப்ரதிகூலர்க்கும் ஆகர்ஷகமாயிறே வடிவிருப்பது" என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி. கண்ணபிரான் பாண்டவ தூதனாய்த் துரியோதனனிட மெழுந்தருள, அக்கண்ணன் வருகையையறிந்த துரியோதனன் 'கண்ணனுக்கு ஒருவரு மெழுந்து மரியாதை செய்யலாகாது' என்று உறுதியாய் நியமித்துத் தானும் ஸபையிலே உறுதியுடமிருக்க, கண்ணபிரான் அங்நேற வெழுந்தருளின வளவிலே, ஸபையிலிருந்த அரசர்களனைவரும் ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவின் சோதியைக் கண்டு பரவசராயெழுந்துவிட, துரியோதனன் தானும் துடை நடுங்கி யெழுந்திருந்துவிட்டு, உடனே 'ஐயோ! நம் உறுதி தடுமாறி விட்டதே ! ஒரு மரியாதையும் செய்யக்கூடாதென்றிருந்த வுறுதி குலைந்து மரியாதை செய்யும்படியாகச் செய்துவிட்டதே இந்தத் திருமேனி யழகு !' என்று கண்ணனையுற்று நோக்கினானாம். இதனைப் பெரியாவாரருளிச் செய்கிறார். சுழல் மன்னர் சூழக்கதிர்போல் விளங்கி யெழலுற்று மீண்டேயிருந்துன்னை நோக்கும் சூழலைப் பெரிதுடைத்துச் சோதனன் என்று. தீவினையேன் விடுதூதாய்="திருமேனியடிகள்" என்று என்னாலே பேரிடப்பெற்ற அவருடைய திருமேனி ஸர்வ ஸாதாரணமானது; எனக்கு அஸாதாரணமாயுமிருந்தது ; அப்படிப்பட்ட திருமேனியை யிழந்து உங்கள் காலிலே விழவேண்டும்படியான பாபத்தைப் பண்ணினேனேயென்று தீவினையேன் என்கிறாள் ; எதிர்மறையிலக்கணையால் நல்வினையேன் என்றபடி ; பாகவதர்களின் திருவடிகளியேல விழப்பெறுகை நல்வினைப் பயனன்றோ. நான் விட்ட தூதாய் நீங்கள் திருமூழிக்களத்தேறச் சென்று அத்திருமேனி யடிகளை நோக்கி திருப்புளியடியிலே கிடக்கிற வொருத்தி உம்முடைய திருமேனியிலே ஆசைவைத்து கைகின்றாள்; அவளுக்கு உமது திருமேனியைக் கொடுத்தருளீர் என்று சொல்லுங்கோள்; இந்த வொருவாய்ச சொல்லுக்கும் துர்ப்பிக்ஷமுண்டோ? இப்படி வாக்குதவி புரிந்தால், உம்மைத் திருமேனி யொளிசுற்றித் தெளிவிசும்புகடியுமே?=உங்கள் வடிவிற் புகரையும் போக்கி நில்மலமான ஆகாசத்தில் நின்றும் உங்களை யோட்டி விடுவிரோ? உங்களுக்குப்ப பண்டில்லாத புகரையும் உண்டாக்குவரே யல்லது உள்ள புகரைக் கொள்ளை கொள்ள மாட்டார் என்கிறாள்.

English Translation

O Beautiful clouds blowing towards prosperous Tirumulikkalam! Go as messengers to my beautiful Lord, and ask him to show himself to this wicked self. Why, would he strip you of your lustre and drive you away from his sky?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்