விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தக்கிலமே கேளீர்கள்*  தடம்புனல்வாய் இரைதேரும்* 
    கொக்குஇனங்காள்! குருகுஇனங்காள்!*  குளிர் மூழிக்களத்து உறையும்*
    செக்கமலத்துஅலர் போலும்*  கண்கைகால் செங்கனிவாய்* 
    அக்கமலத்துஇலைப்போலும்*  திருமேனி அடிகளுக்கே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தட புனல் வாய் – பெரிய ஜலாசயத்திலே
இரைதேரும் – இரை தேடித்திரினிற் கொக்கு இனங்காள் குருகு இனங்காள்!
குளிர் மூழிக்களத்து உறையும் – குளிர்ந்த திருமூழிக்களத்திலே நித்ய வாஸம் பண்ணுமவராய்
செம் கமலத்து அலர் போலும் கண் கைகால் – செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண் திருக்கை திருவடிகளை யுடையராய்
செம் கனி வாய் – சிவந்து களிர்ந்த திருப்பவளத்தை யுடையராய்

விளக்க உரை

திருவாய்மொழியாயிரத்தினுள் அது விடுகிற பதிகங்கள் நான் கென்று சொன்னோமே; அவற்றும் ஒவ்வொரு பாட்டு உயிராக வைக்கப்படுகிறது, இப்பதிக்த்திற்கு உயிரான பாட்டு இது; கீழ்ப்பாட்டில் தமரோடு அங்குறைவார்க்கு என்று சொன்னபடி தம்மை யுகந்த பாகவதர்களோடுண்டான சேர்த்தியில் இனிமையாலே பிரிந்தார்க்கு உயிர்தரித்திருக்க வொண்ணாதபடியான தம்முடைய வடிவழகை மறந்து நம்மை நினையாதிருக்கினறாரத்தனை; இவ்வடிவழகைப் பிரிந்தார் தரிப்பரோவென்று அவ்வழகையறிவித்து விட்டால் வாராதிருக்கமாட்ரென்று கொண்டு செக்கமலத்தல்போலுங் கண்கைகால் செங்கனிவாய் அக்கமலத்திலைபோலுந் திருமேனியடிகளுக்குத் தக்கிலமே கேளீர்கள் என்றும், பூந்துழாய் முடியார்க்குப் பொன்னாழிக்கை யாருக்கு–தாம் தம்மைக் கொண்டு அகல்தல் தகவன்றென்றுரையீரே என்றும் வடிவழகு பற்றாசாகத் தூதுவிடுகிற பதிகமிது என்று அறிவதற்கு இப்பாட்டு நிதானாமாயிருக்கும். ஆசார்யஹருதயத்தில் *தம்பிழையும் சிறந்த செல்வமும் * என்ற சூர்ணையில் *தமரோட்டை வாஸம் மறப்பித்த ஸெளந்தர்யத்தை யுணர்த்தும் அர்ச்சை காலாந்தூதுக்கு விஷயம் * என்பது காட்டப்பட்டிருப்பது முணர்க. தக்கிலமே கேளீர்கள் என்றதற்கு நம்பிள்ளை யீடு;– "நாம் ஒன்றிலே துணியும்படி அறுதியாகக் கேட்டுப் போருங்கோள். அவர் இன்னும் இதுவேணுமென்றிருந்தாராகில் ப்ராணன்களை வருந்தி நோக்கிக் கொண்டு கிடக்கவும், வேண்டாவென்றிருந்தாராகில் நரமுமொன்றிலே துணியும்படி அறுதியாகக் கேட்டு விடுங்கோள" என்று. அதாவது, இரண்டத்தொன்று கேட்டு வந்து சொல்லுங்கோள்; இத்தலையில் அவர்க்கு அபேக்ஷையுளதென்று தெரியவந்தால் வருந்தியாகிலும் பிராணனைப் பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறேன்; அவர்க்கு அபேக்ஷைபில்லை, உபேக்ஷைதான் என்று தெரிய வந்தால் வேண்யுத்க்ரதனத்திலே நுணிந்த பிராட்டியைப்போலே ஏதோவொரு வழியிலே துணிகிறேன் என்றவாறு. கொக்னிங்காள் குருகினங்காள்–குருகு என்பது கொக்கிலே ஒரு ஜாதி பேதம், குருகு–கொய்யடிநாரை என்பர். [அக்கமலத் திலைபோலுந் திருமேனி] கீழ் எட்டாம் பத்தில் சாயல் சாமத் திருமேனி தண்பாசடையா *என்றதையும் இங்கு நினைப்பது–தம் பத்மதளபத்ராக்ஷம் * என்ற ஸ்ரீராமாயண ச்லோகத்தை நிர்வஹிக்குமிடத்து இப்பாசுரம் உதவியாகும். எங்ஙனேயென்னில்; பத்ரம் என்றாலும் நம் என்றாலும் பர்யாயமாயிருக்க தளபத்ராக்ஷம் என்றது பொருந்துமோ வென்று சிலர் சங்கிப்பர்கள்; அதற்கு ஸமாதானமாவது, *அக்ஷமிந்த்ரிகாயயோ * என்ற நிகண்டின்படி அக்ஷசப்தமானது கண்ணையும் மேனியையும் சொல்லக் கடவதாகையாலே (இரண்டுற மொழிதலால்) அவ்விரண்டு பொருளையும் இங்குக் கொண்டு பத்மதளம் போன்ற அக்ஷத்தையுடையவர்–தாமரையிதழ் போன்று நீண்டழகிய திருக்கண்களை யுடையுவர்; பத்மபத்ரம் போன்ற அக்ஷத்தையுடையவர்–தாமரையிலை போன்று பசுமையான திருமேனியையுடையவர் என்று நிர்வஹிப்பதாம். எம்பெருமானது திருமேனிக்குத் தாமரையிலையை யொப்பாகச் சொல்லுவதற்கு இப்பாசுரம் ப்ரமாணமென்க.

English Translation

O Flocking storks and herons searching for worms in my lake! The Lord resides in cool Tirumulikkalam, His limbs and eyes are like lotus flowers, his dark hue is like the leaves. Go ask him; are we not fit for his company

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்