விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நுமரோடும் பிரியாதே*  நீரும் நும் சேவலுமாய்* 
    அமர்காதல் குருகுஇனங்காள்! அணி மூழிக்களத்து உறையும்*
    எமராலும் பழிப்புண்டு*  இங்கு என்தம்மால் இழிப்புண்டு* 
    தமரோடுஅங்கு உறைவார்க்குத்*  தக்கிலமே! கேளீரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நுமரோடும் பிரியாதே – உங்களினத்தார்களை வீட்டுப் பிரியாமல்
நீரும் நும் சேவலும்ஆய் – தம்பதிகளாய்க் கொண்டு
அமர்காதல் குருகு இனங்காள் – கூடிக் களித்துவர்த்திக்கும்படியான ப்ரணயத்தையுடைய குருகினங்களே
அணி மூழிக்களத்து உறையும் – திருமூழிக்களத்திலே நித்யவாஸம் பண்ணுகிற
தம்மால் இழிப்புண்டு – தம்மால் உபேக்ஷிக்கப்பட்டு (அது காரணமாக)
எமலாரும் பழிப்புண்டு – எம்மைச் சேர்ந்தவர்களாலும் பழிக்கப்பட்டு

விளக்க உரை

திருமூழிக்களத்திலே தாமும் தாமுகந்த அடியார்களுமாயெழுந்தருளியிருக்குமிருப்பிலே நானும் வந்து அடிமை செய்யப் பெறலாகாதோ? அந்த கோஷ்டியிலே அந்வயிக்கை நான் அயோக்யனோ வென்று கேளுங்கோளென்று சில குருகினங்களைக் குறித்துச் சொல்லுகிறாள். [நுமரோடும் பிரியாதே] மேலே எம்பெருமானைச் சொல்லுமிடத்து "தமரோடு அங்குறைவார்க்கு" என்று சொல்லுகையாலே அவன் தமரோடு கூடி வாழுகிறப்போலே நீங்கள் நுமரோடுகூடி வாழப்பெறுகிறீர்கள். அவனுடைய ஸாம்யாபத்தி உங்கள் திறத்திலே பலித்திருப்பதுபோலே என் திறத்திலும் பலிக்கவேண்டாவோ? அவன் தன் அபிமதர்களோடே கூடி வாழுகிறப்போலவும்; நீங்கள் உங்களபிமதர்களோடே கூடிவாழுகிறாப் போலவும் நானும் என்னபிதமதனோடே கூடிவாழும்படி செய்யவேண்டாவோ? என்பது குறிப்பு. 'குறைவாளர்காரியம் குறைவற்றார்க்குத் தீர்ககவேண்டாவே? உண்டார்க்கு பட்டினி கிடந்தார்பசி பரிஹரிக்க ப்ராப்தமிதே' என்பது ஈடு. மூன்றாமடியை–"அணிமுழிக்களத்துறையும் தம்மாவிழிப் புண்டு எமராலும் பழிப்புண்டு இஙகு ஏன்?" என்று அந்வயித்துப் பொருள் கொள்ள வேணும். திருமூழிக்களத்து நாயனார் யாத்ருச்சிகமாக ஒருகால் கலந்து கைவிட்டார். அதுவே ஹேதுவாக பந்துக்களும் கைவிட்டார்களென்னை? இப்படி அத்தலைவர்க்குமாகாதே உற்றாருறவினர்க்குமாகாதே கைவல்யம் போலே யிருக்கிற இவ்விருப்புக்கு என்ன ப்ரயோஜனமுண்டு? என்றபடி. தமரோடு அங்குறைவார்க்கு=எம்பெருமான் என்னையுபேக்ஷிப்பதற்கு ஹேதுவில்லை; ஆனாலும் திருமூழிக்களத்திலே தன்னை யுகந்த பர்கவதர்களோடு கூடி வாழப்பெற்ற இனியைலே என்னை மறந்திருக்கினறவத்தனை என்று காட்டுவதும் இங்கு விவக்ஷிதம். அந்தத் தமரோடே நானும் ஒருவனாகத் திருவுள்ளம்பற்ற ப்ராப்தியில்லையோ வென்று கேளுங்கள் என்றாராயிற்று.

English Translation

O Lovebird herons flocking with your mates and kin! I am spurned by him and scorned by me kin. What use living? Go ask my Lord who lives in Tirumulikkalam with his retinue; are we not fit for his company?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்