விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எம்கானல் அகம்கழிவாய்*  இரை தேர்ந்துஇங்கு இனிதுஅமரும்* 
    செங்கால மடநாராய்!*  திருமூழிக்களத்து உறையும்*
    கொங்குஆர் பூந்துழாய்முடி*  எம்குடக்கூத்தர்க்கு என்தூதாய்* 
    நும்கால்கள் என்தலைமேல்*  கெழுமீரோ நுமரோடே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எம்கானல் அகம் கழிவாய் – எங்கள் உத்யானத்தில் உள்ளிருக்கிற கழியிலே
இரை தேர்ந்து – இறைதேடி
இங்கு இனிது அமரும் – இங்கே பொருந்தி வர்த்திக்கிற
செம் கால மட நாராய் – சிவந்த காலையுடைய அழகிய நாரையே!
திருமூழிக் களத்து உறையும்  – திருமூழிக்களத்திலே நித்யவாஸம் பண்ணுமவனாய்

 

விளக்க உரை

பறவைகளைத் தூதுவிடுகிற பதிகமானாலும், ஆசாரியர்களே இங்குப் பறவைகளாகக் கருதப்படுகிறார் களென்பதை இம் முதற் பாட்டில் தெளிய வைத்தருளுகிறாராழ்வார்–"நுங்கால்களென் தலைமேல் கெழுமீரோ அமரோடே" என்னுமீற்றடி அமைந்த அழகை என் சொல்வோம்! முதற் பிரபந்தமான திருவிருத்தத்தில் தூது போகைக்கு வண்டுகளையழைக்கும்போதே "எம்மீசர் வண்ணோர் பிரானார் மாசில் மலடிக்கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே!" என்றார். எம்பெருமானுடைய திருவடியிணையின்கீழ்த் தம்மைச் சேர்ப்பிக்க வல்ல ஆற்றல்வாய்ந்த ஆசாரியர்களையே தூதர்களாகக் கொண்டதாய் நன்கு காட்டியருளினார். அப்படிப்பட்ட ஆசாரியர்கள் ஸபரிவாரராகத் தம் தலைமீது திருவடிகளை வைக்கப் பெறுவதே பெறாப்பேறு என்னுமிடத்தை முடிவான இத்தூதுபதிகத்திலே உயிராகவைத்து அருளிச் செய்கிறாராயிற்று. எங்கனால்–என்ற விடத்து நம்பிள்ளை வீடு பரமபோக்யமானது; – "பகவத் விஷயத்தில் உபகாரகரோடு ஐகரஸ்யம் ப்ராப்தமாயிருக்க, எம் என்றது–ஒன்றைத் தம்ம சாக்கிக் கொடுத்தல்லது தரிக்கமாட்டாத உபகாரஸ்ம்ருகியாலே சொல்லுகிறது, பிறர்க்கு உபகரிக்கைக்காக வரும் மமகாரம் உத்தேச்யமாயிருக்குமிறே. தன்னை பகவத் விஷயத்துக்கு ஆக்கினவன்றே தன்லாதடங்கலும் அங்குத்தைக்கு சேஷமாயிருக்க, உபகாரஸ்ம்ருதியிறே இப்படி சொல்லுவித்தது. ஆத்ம ஸமர்ப்பணத்துக்கும் அடி இதுவிறே" என்று, 'எம் கானல்' என்று மமகாரம் தோற்றச் சொல்லுவது ஸ்வரூபவிருத்தமல்லா வென்று சவ்வை; ஏதாவதொன்றை ஸ்வகீயமாக்கி அத்தலைக்குக் கிஞ்சித்கரித்தாகவேண்டு மென்கிற ஆசை படியாக இங்ஙனே சொன்னதாகையாலே குற்றமில்லை யென்று பரிஹாரம். அகங்கழிவாய் இரை தேர்ந்து என்றது–அந்தரங்கமாய் வந்து வர்த்திக்கிறபடியைச் சொன்னவாறு, தூதனுப்ப உங்களைத் தேடிப்பிடியாக வேண்டாதபடி அருகே வந்து வர்த்திக்கப்பெற்ற பாக்கியம் என்னே ! என்று உன்குழைந்து சொல்லுகிறபடி. ஸ்வாபதேசத்தில் ஆசாரியர்களைத் தூது விடுவதாகச் சொல்லுகையாலே, எம்பெருமானார் திருமாளிகையிலேயே வந்திருந்து ப்ரவசநம் செய்தருளின பெரிய நம்பியைப் போன்ற ஆசாரியர்களை இங்குக் கருதுவதாகக் கொள்ளலாம். செங்கால மடநாராய்! என்று கால்களை விசேஷித்துச் சொல்லுகையாலே ஆசாரியன் திருவடிகளே தஞ்ச மென்கிற அர்த்தமும் காட்டப்படுகிறது.

English Translation

O Good egret searching for worm in my garden mire! Go to Tirumulikkalam as my messenger, to my pot-dancer Lord who wears the fragrant Tulasi; then you and all your kin may place your feet on my head

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்