விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கடியனாய்க் கஞ்சனைக்*  கொன்றபிரான் தன்னை* 
    கொடிமதிள் தென்குருகூர்ச்*  சடகோபன்சொல்*
    வடிவுஅமைஆயிரத்து*  இப்பத்தினால் சன்மம்- 
    முடிவுஎய்தி*  நாசம்கண்டீர்கள் எம்கானலே   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வடிவுஅமை ஆயிரத்து – சொற்பொருளழகு பொலிந்த ஆயிரத்தினுள்ளும்
இ பத்தினால் – இப்பதிகத்தினால்
எம் சன்மம் முடிவு எய்தி – நம்முடைய ஜன்ம பரம்பரைகள் முடிவு பெற்று
கானல் – கானலென்னும்படியான ஸம்ஸாரம்
நாசம் கண்டீர்கள் – நாசமடைந்தொழியு மென்பது திண்ணம்.

 

விளக்க உரை

இந்தத் திருவாய்மொழி கற்றார்க்குப் பிறவி முடிந்து அதுக்கடியான ஸம்ஸாரமும் நசிக்குமென்று பயனுரைத்துத் தலைகாட்டுகிறார். கீழ்ப்பாட்டின் முடிவில் "காட்கரை யப்பன் கடியனே" என்றார்; இப்பாட்டின் தொடக்கத்தில் "கடியனாய்" என்கிறார்; சொல் ஒன்றாயிருந்தாலும் பொருள் வேறுபட்டிருக்கும். "காட்கரையப்பன் கடியன்" என்ற விடம்–தம்மை யநுபவிப்பதில் விரைவு கொண்டவன் என்றபடி. "காற்றிற் கடியனாய்" என்றதுபோல. இங்கே, கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரானென்றது–கோபத்தை யேறிட்டுக் கொண்டவனாய்க் கம்ஸனை முடித்வனென்றபடி. கஞ்சனைக் கொன்ற பிரானென்றவுடனே "கொடிமதின் தென்குருகூர் " என்கையாலே இந்த ஸமபிவ்யாஹாரத்திற்குச் சேர நம்பிள்ளை யருளிச் செய்வது பாரீர்– "கம்ஸ விஜயத்துக் கொடி கட்டிற்று திநகரியிலேயாய்த்து ஸ்வாமி விஜயத்துக்கு உரியவடியாரிருந்தவிடத்தேயிறே கொடி கட்டுவது " என்று. வடிவு அமை ஆயிரம்=எம்பெருமானுடைய ஸ்வரூபரூபகுண விபூதிகள் யாவும் அழகாக அமையப் பெற்றவாயிரம் என்றபடி. அதில், இப்பத்தினால் சன்மம் முடிவெய்தி=கீதை யில் ஜந்ம கர்மச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத, த்யக்த்வா தேஹம் புநர்ஜன்ம நைதி மாமேதி ஸோர்ஜீ என்று தன்னுடைய அவதார சேஷ்டிகதங்களை யநுஸந்திப்பார்க்குச் சொன்ன பலனைப்பெற்று. எங்கானல் நாசங்கணடீர்கள். கானலாவது ம்ருகத்ருஷ்ணிகை ஒன்றுமின்றிக்கே வீணாசையைப் பிறப்பிக்குமது கானலெனப்படும். அப்படிப்பட்டதான இந்த ஸம்ஸாரத்திற்குக் கானலெனும் பெயர் மிகப் பொருந்தும்.

English Translation

This decad of the thousand songs by Satakopan of lvy-walled kurugur on the Lord who killed kamsa will destroy the mirage of the world, just see!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்