விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாரிக்கொண்டு*  உன்னைவிழுங்குவன் காணில்' என்று* 
    ஆர்வுஉற்ற என்னை ஒழிய*  என்னில் முன்னம்
    பாரித்துத்*  தான்என்னை*  முற்றப் பருகினான்* 
    கார்ஒக்கும்*  காட்கரைஅப்பன் கடியனே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வாரிக் கொண்டு விழுங்குவன் என்று – கபளீகரிப்பேனென்ற
ஆர்வு உற்ற – ஆசைகொண்ட
என்னை ஒழிய – என்னளவன்றியே
என்னில் முன்னம் பாரித்து –  (இப்படி செய்யவேணுமென்று) எனக்கு முன்னமே மனோரதித்து
தான் என்னைமுற்ற பருகினான் – என்னை நிச்சேஷமாகக் கபளி கரித் தவனான

 

விளக்க உரை

திருவாய்மொழி யாயிரத்தினுள்ளும் இப்பாட்டு உயிரானதென்னலாம். ஈச்வர லாபம் சேதநர்களுக்குப் புருஷார்த்தமா? சேதநலாபம் ஈச்வரனுக்குப் புருஷாத்தமா? என்றொரு விசாரம் ஸம்ப்ரதாய ரஸிகர்கள் செய்வதுண்டு; சேதநலாபந்தான் ஈச்வரனுக்குப் புருஷார்த்தம் என்பதே ஸித்தாந்தம். எம்பெருமான் ஸ்ருஷ்டியவதாரதிமுகத்தாலே க்ருஷி பண்ணுவதெல்லாம் ஒரு சேதகன் நமக்குக் கிடைப்பனாலென்கிற நப்பாசையினாலன்றோ. கீதையிலே *ஸ மஹாத்மா ஸீதுர்லப * என்று கண்ணீர் பெருக நின்று சொல்லுகிற வார்த்தையன்றோ. *வாஸீதேவஸ் ஸர்வ மென்றிருக்கிற மஹாத்மா எனக்குக் கிடைக்க வில்லையே ! என்றன்றோ சொல்லுகிறான். பாடுப்டடத் தேடிப்பாத்தும் கிடையாமையாலே வருந்திச் சொல்லுகிற வார்த்தை இது என்று நன்கு தெரிகிறதன்றோ. எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யத்தில் *அநாவ்ருத்தி ஸீத்ர பாஷ்யத்தில் (அதாவது ஸ்ரீபாஷ்த்தின் முடிவில்) *நச பரமபுருஷஸ் ஸத்யஸங்கல்ப அத்யர்த்தப்ரியம் ஜ்ஞாநிநம் லப்த்வா சதாசித் ஆவர்த்தயிஷ்யதி * என்பதில் "ஜ்ஞாநிநம் லப்த்வா " என்கிற அற்புதமான ஸ்ரீஸூக்தியினால் இப்பரமாத்தத்தை ப்ரகாசிப் பித்தருளினார். இப்பரமாத்தந்தன்னை ஆழ்வார் ஸ்வாநுபவ முகத்தாலே இப்பாட்டில்தெளியவைத் தருளுகிறார். இப்பாட்டில் "என்னில் முன்னம் பாரித்துத் தானென்னை முற்றப் பருகினான் " என்றது ஸத்ஸம்ப்ரதாய ரஸிகர்களின் நெஞ்சை யுருக்கும் வார்த்தை. 'உன்னைக்காணில் வாரிக் கொண்டு விழுங்குவேன் ' என்று தாம் ஆசைப்பட்டிருந்தாகவும், தமக்கு முன்னே நெடுநாளாக எம்பெருமான் தம் விஷயத்தில் இங்ஙனே பாரித்திருந்து தன்னுடைய மனோரதமே தலைக்கட்டப் பெற்றான். என்றருளிச் செய்தவிதனால் ஸ்வகத ஸ்வீகாரத்திலுங்காட்டில் பரகத ஸ்வீகாரமே வலிதென்றும், அதுதான் முற்பட்டதாயிருந்து கார்யகரமாகின்ற தேன்றும் சொவிற்றாயிற்று. கீழ்ப்பாட்டுக்களில் "என்னுயிருண்ட மாயன் " என்றும், "என்னுயிர்தானுண்டான் "என்றும், "என்னைமுற்றவுந் தானுண்டான் " என்றும் எம்பெருமான் உண்டபடியைச் சொன்னார்; உண்டவனுக்குத் தண்ணீரும் அபேக்ஷிதமாயிருக்குமே ; தண்ணீர் குடித்தபடி சொல்லிற்று இப்பாட்டில் தானென்னை முற்றப் பருகினான் என்று இவருடைய உண்ணுஞ்சோறு பருகுநீர் அவன் அவனுடைய உண்ணுஞ்சோறு பருகுநீர் இவர்.

English Translation

I thought, "If ever I see him I will gobble him", but before I could, he deceived me and hastily drank my all. My dark Lord of Tirukkatkarai is smart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்