விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காட்கரைஏத்தும்*  அதனுள் கண்ணாஎன்னும்* 
    வேட்கை நோய்கூர*  நினைந்து கரைந்துகும்*
    ஆட்கொள் வான்ஒத்து*  என்னுயிருண்ட மாயனால்* 
    கோள்குறைபட்டது*  என்னாருயிர் கோள்உண்டே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆள் கொள்வான் ஒத்து – அடிமை கொள்வரைப் போலே (புகுந்து)
என் உயிர் உண்ட மாயனால் – என்னாத்மாவைக் கொள்ளை கொண்ட மாயப்பெருமானாலே
கோள் உண்டே – புஜித்துக் கொள்ளப்படச் செய் நேயும்
கோள் குறைபட்டது – போகம் மிச்சப்பட்டிருக்கிற தென்னலாம்படியிருக்கிற
என் ஆருயிர் – என்னாத்மாவானது

 

விளக்க உரை

என்னை யடிமை கொள்வாரைப்போலே வந்து புகுந்து என்னுயிரை மானப்புஜித்து, பின்னையும் புஜியாதான் போலே கிடந்து படாநின்றானென்கிறார். காட்கரையேத்தும்–அவனைக் காட்டிலும் அவனிருக்குமூரிலே ஆசை மிகுந்த அவ்வூரையே யேத்தா நின்றது என்னாருயிர். ஊருக்கு அவனாலே யேற்றமாய், அவனுக்கு ஊராலே யேற்றமா யிருக்கையாலே ஊரையுஞ் சொல்லி அவனையுஞ் சொல்ல வேண்டி யிருத்தலால் அதனுள் கண்ணாவென்னும்–திருக்காட்கரைப் பெருமானே! என்று அவ்வூரின் ஸம்பந்தத்தை விட்டு அவனையுமேத்தாநின்றது. பரமபதநாதனென்றால் ஏற்றமில்லையே; அவ்விடத்திலும் இவ்விடத்தில் வாஸத்தாலே ஏற்றம் பெறுவோமென்று வந்து இங்கே நின்று ஏற்றம் பெற்றனனாதலால். வேட்கை நோய் கூர நினைந்து உகும். அவ்வூரையும் அவ்வூர்ப் பெருமானையும், நினைத்த மாத்திரத்திலேயே காதல் நோய் அதிகரிக்கும்; அதனால் த்ரவீபாவமும் சைதில்யமும்ம விளையும். இப்படியெல்லாமாகைக்கு அடியேதென்னில்; பின்னடிகளால் அது சொல்லுகிறது. "கீழ் திருவருள் என்று மறைத்துச் சொன்னதை வெளியிடுகிறார்" என்பர் நம்பிள்ளை. அடிமை கொள்வாரைப் போலே புகுந்து என்னை சூன்யமாக்கின ஆச்சர்ய பூதனாலே என்னாருயிர் கோளுண்டே கோள் குறைபட்டது–என்னாத்மா நிசேஷமாக புஜிக்கப்படா நிற்கச் செய்தேயும் இத்தலையிலே சிறிது சேஷித்தது. இங்ஙனே சொல்லுகைக்குக் கருத்தென்? என்னில் ; இன்னமுமிருந்து கிலேசப்படக் காண்கையாலே சிறிது சேஷமிருந்தாக வேண்டுமே; அது கொண்டு சொல்லுகிறது.

English Translation

Worshipping my Krishna at Tirukkatkarai, my love-sickness grows; I think and then weep. He came and took me lovingly into his service. But my soul diminishes day by day, alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்