விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நீர்மையால் நெஞ்சம்*  வஞ்சித்துப் புகுந்து*  என்னை 
    ஈர்மைசெய்து*  என்உயிர்ஆய் என்உயிர் உண்டான்* 
    சீர்மல்குசோலைத்*  தென்காட்கரைஎன்அப்பன்* 
    கார்முகில் வண்ணன்தன்*  கள்வம் அறிகிலேன்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெஞ்சம் வஞ்சித்து புகுந்து – ஏதோ வஞ்சனையினால் என் நெஞ்சினுள்ளே புகுந்து
நீர்மையால் என்னை ஈர்மை செய்து – முறைகெடப் பரிமாறும் சீல குணத்தினால் என்னை நலிந்து
என் உயிர் ஆய் என் உயிர் உண்டான் – எனக்குத் தாரகனாயிருப்பன் போல என்னை யழித்தவனும்
சீர்மல்கு சோலை தென் காட்கரை என் அப்பன் – அழகு நிரம்பிய சோலைகளால் சூழப்பட்ட திருக்காட்கரையியெழுந்தருளியிருக்கும் பெருமானும்
கார்முகில் வண்ணன் தன் – காளமேக வண்ணனுமானபரம புருஷனுடைய

 

விளக்க உரை

கீழ்ப்பாட்டின் ஈற்றடிக்கு வியாக்கியானமாயிருக்கிறது இப்பாட்டெல்லாம். அடிமை கொளுவதாக ஒரு வியாஜமிட்டு உள்ளே புகுந்து தன் படிகளைக் காட்டி ஸர்வஸ்வாப ஹாரம் பண்ணின வாற்றை அந்தோ! நினைக்க மாட்டிற்றிலேனென்கிறார். " வஞ்சித்து நெஞ்சம் புகுந்து என்னை நீர்மையால் ஈர்மை செய்து" என்று அந்வயித்துப் பொருள் கொள்வது சுவைமிக்கது. வஞ்சித்து நெஞ்சம் புகுகையாவது–தான் சேஷியும் நான் சேஷனுமான முறை தவறாது பரிமாறுவதாகவே சொல்லி நெஞ்சை இசையப் பண்ணிப் புருகை முறை கேடாகப் பரிமாறப் போகிறேனென்று முன்னமே சொன்னால் இவர்தான் இசைய மாட்டாரென்று எண்ணி முறை கெடாது பரிமாறுவதாகப் பொய் சொல்லி உள்ளே புகுந்தானாயிற்று. புகுந்தபின் நிர்மையைக் காட்டத் தொடங்கினான். அதாவது, தான் தாழ நின்று பரிமாறத் தொடங்கினானென்கை. அதனால் நெஞ்சை யீடுபடுத்தினானாயிற்று. ஈர்மை செய்து என்றது ஈருந்தன்மைகளைச் செய்து என்றபடி; இருபிளவாக்கி, ஈடுபடுத்தியென்க. நீராம்படி பண்ணி யென்பது பரமதாற்பரியம். என்னுயிராயென்னுயிருண்டான்–எனக்குத் தாரகரைப் போலே புகுந்து என்னையழித்தாரென்கை. எனக்குத் தன்னாலல்லது செல்லாதபடி பண்ணி என்னைப் புஜிப்பதுஞ் செய்தான் என்றுமாம். இப்படிச் செய்தவன் யாவனென்ன; சீர்மல்கு சோலைத் தென்காட்கரையென்னப்பன் கார்முகில் வண்ணன்=என்னோடு கலந்து என்னுடைய நீர்மையையும் கொள்ளை கொண்டதனால் கடலைக் கழுத்தளவாகப் பருகின காளமேகம்போலே புகர்படைத்து விளங்குகின்ற திருக்காட்கரையப்பன். அவனுடைய கள்வமறிகிலேன்= ஸர்வஸ்மாத்மரனானவன் இங்ஙனே தாழநின்று பரிமாறுகை அஸம்பாவிதம்; நான் மருண்டு பேசுகிறேனோ! என்கிறார்.

English Translation

Through goodness he deceived my heart and entered it. Then he became my soul, hurt me and took my life. My dark hued Lord and father lives in Tirukkatkarai, I do not understand his deceits

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்