விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்*  சொல்லு சொல்லு என்றுசுற்றும்இருந்து* 
    ஆர்வினவிலும் வாய் திறவாதே*  அந்தகாலம் அடைவதன்முன்னம்*
    மார்வம்என்பதுஓர் கோயில்அமைத்து*  மாதவன்என்னும் தெய்வத்தைநாட்டி* 
    ஆர்வம்என்பதுஓர் பூஇடவல்லார்க்கு*  அரவதண்டத்தில் உய்யலும்ஆமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அந்தக் காலம் - மரணகாலமானது
அடைவதன் மூலம் - வந்து கிட்டுவதற்கு முன்னே;
மார்வம் என்பது - ‘ஹ்ருதயம்’ என்கிற
ஓர் கோயில் - ஒரு ஸந்நிதியை
அமைத்து - ஏற்படுத்தி (அந்த ஸந்நிதியில்)

விளக்க உரை

துணையுஞ்சார்வுமாகுவார்போற் கற்றத்தவர் பிறரும், அணையவந்த ஆக்கமுண்டேல் அட்டைகள் போற் சுவைப்பர்” என்றபடி இவன் கையிலிருந்தவற்றை ஒன்றுமிகாதபடி பறித்துக்கொண்ட பந்துக்கள் வந்து சூழ்ந்து கொண்டு, “எங்களுக்குத் தெரியாமல் எந்த மூலையிலாவது ஏதாகிலுமொரு பொருள் வைத்துண்டாகில், அதை எமக்குச் சொல்லு” என்று பலவாறு நிர்ப்பந்தித்துக் கேட்டால், அவர்களுகுக்கு மறமொழிச் சொல்லவும் மாட்டாதபடி மரணகாலம் வந்து கிட்டுவதற்கு முன்னமே, எம்பெருமானை நெஞ்சில் நிறுத்தி அன்பு பூண்டிருக்கவல்லவர்கள், யமகிங்கரர்களுடைய ஹிம்ஸைகளுக்குத் தப்பிப் பிழைப்பர்களென்கிறார். சோர்வு- மறதியும், களவுமாம். ஆர்வினவிலும்- இளையான் கேட்டாலும் என்க. அந்தக் காலம் *** அரவதண்டத்தில்- ஐந்தாம்வேற்றுமை; ஏழாம் வேற்றுமையன்று. முதலடியில் “கற்றுமிருந்தார்” என்ற பாடமுமுண்டு. (கூ)

English Translation

If you have amassed wealth, relatives will surround you and ask, “Tell us, tell us”, but amnesia will prevent you from answering anyone. Before that happens, make your heart the Lord’s temple, install the name Madhava as its deity, and worship him with the flower called love. For those who can, yes, there is escape from the punishment of Yama’s agents.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்