விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த*  பல்ஊழிக்குத்* 
    தன்புகழ்ஏத்தத்*  தனக்குஅருள் செய்தமாயனைத்*
    தென்குருகூர்ச் சடகோபன்*  சொல்ஆயிரத்துள் இவை* 
    ஒன்பதோடு ஒன்றுக்கும்*  மூவுலகும் உருகுமே   (2)   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இன்பம் தலைப் பெய்து – பேரின்பத்தை விளைவித்துக் கொண்டு
எங்கும் தழைத்த  – எங்கும் மவியாபித் திருக்கின்ற
தன் புகழ் – எம்பெருமான்றனது கீர்த்திகளை
பல் ஊழிக்கு ஏத்த – ஊழிதோறூழியோவாமல் அதிக்கும்படியாக
தனக்கு அருள் செய்த – தமக்கு பரம கிருமை பண்ணின

விளக்க உரை

ஆரேனுமாகிலும் உருகியே நிற்பர்கள் என்கிறார். கீழே ஆறாம்பத்தில் பொன்னுலகாளீரோ என்கிற பதிகத்திற்குப் பயனுரைத்த பாசுரத்தில் "ஊற்றின்கண் நுண்மணல்போலுருகா நிற்பர் நீராயோ" என்றருளிச் செய்தது மிங்குக் காண்க. முதலடியை இரண்டுபடியாக அந்வயிக்கலாம் ; எங்குந் தழைத்த இன்பம் தலைப்பெய்து–லோகமெல்லாம் வெள்ளமிட்ட அளவுகடந்த ப்ரீதியை யுடையராய்க் கொண்டு என்றபடி. அன்றியே, இன்பந் தலைப்பெய்து எங்குந் தழைத்த தன்புகழைப் பல்லூழிக்கு ஏத்த அருள் செய்த மாயனை என்றும் அந்வயிக்கலாம். இன்பத்தை யுண்டாக்கா நின்று கொண்டு எங்கும் வியாபித்திருக்கினற் தன்னுடைய திருப்புகழ்களைக் காலதத்துவமுள்ள தனையும் ஏத்தும்படியாகத் தமக்கு அருள் செய்த எம்பெருமானைக் குறித்து ஆழ்வாரருளிச் செய்த ஆயிர மென்க. "அநுபவிதாக்களுக்கு நிரவதிக ஸீநாவஹமாய் லோகமெல்லாம் நிறைந்த தன்புகழை ஸர்வகாலமும் ஏத்தும் படி தனக்கு அருள்செய்த மாயனை" என்பது ஆறாயிரப்படியருளிச் செயல். மாயனைக் குறித்து அருளிச்செய்த ஆயிரத்துள் இப்பதிக்கத்தில் முதலிட்டு ஒன்பது பாட்டும் ஒரு தட்டாய், பத்தாம் பாட்டு மாத்திரம் பாமவிரக்ஷணமாயிருக்கையாலே ஒன்பதோ டொன்றுக்கும் என்னப்பட்டது. அப்படிப்பட்ட இப்பதிக்கத்திற்கு மூவுலகும் உருக வேண்டாவோ வென்கிறார். பலனுரைத்துத் தலைக்கட்டுகிற பாசுரத்தில் ஒரு பலன் சொல்லதே இங்ஙனே சொல்லலாமோ வென்னில் இதுவும் பயனுரைத்த படியேயாம்; ஒன்றுக்கும் கரையாதே உருகாதே கல்லாயிருப்பவர்களையும் உருகச் செய்வது ஒரு பலனன்றோ.

English Translation

This decad of the thousand songs by kurugur Satakopan blest to sing in sing, the praise of the Lord who reigns in joy everywhere, will melt the hearts of all

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்