விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எழநண்ணி நாமும்*  நம்வானநாடனோடு ஒன்றினோம்* 
    பழன நல்நாரைக் குழாங்கள்காள்*  பயின்றுஎன்இனி*
    இழைநல்லஆக்கையும்*  பையவே புயக்குஅற்றது* 
    தழைநல்ல இன்பம் தலைப்பெய்து*  எங்கும் தழைக்கவே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இழை நல்ல ஆக்கையும் – ஆபரணாபிராமநான சரீரமும்
பையவே – நாளடைவிலே
புயக்கற்றது – வசையற்றதாயிற்று
எங்கும் – உலகமெல்லாம்
தழை நல்ல இன்பம் தலைப்பெய்து – விஸ்தீர்ணமாய் நன்றான ஸுகத்தைப் பெற்று

விளக்க உரை

திருப்புயாழ்வாரடியிலேயே எழுந்தருளி யிருப்பது காண்கிறோமே; எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடொன்றினோ மென்றது பொய்யுரையாகவன்றோ வுள்ளது என்று சொல்ல; அதற்கு மறுமொழி கூறுவது மூன்றாமடி; [இழை நல்ல வாக்கையும் பையவே புயக்கற்றது] உடல் ஒன்றே இங்குள்ளது அதுவும் இதோ போய்க்கொண்டே யிருக்கிறது என்றபடி. இழை நல்ல ஆக்கை =இழை யென்று ஆபரணத்திற்குப் பெயராதலால், ஆபரணங்களினாலே அழகியதான சரீரம் என்றபடி,. அன்றியே, அவனுக்கு ஆபரணம்போலே ஸ்ப்ருஹணீயமான சரீரம் என்றுமாம். பையவே என்றது இன்று நாளையிலே யென்றபடி. புயக்கற்றது–பசையற்றது, தொலையப்போகிறது என்பது கருத்து. தழை நல்ல இன்பம் தலைப்பெய்து எங்குத் தழைக்கவே= இதற்கு மூன்று ஆசிரியர்கள் மூன்று வகையாகக் கருத்துக் கூறினராம்; பெரியவர்களாயிருப்பார் பரமபத மெழுந்தருளும் பேரது லோகாஸ் ஸமஸ்தாஸ் ஸீகிநோ பவந்து என்றும் 'நாடு வாழ்க' வென்றும் மங்களாசாஸனம் செய்துகொண்டு போவார்களாதலால் ஆழ்வாரும் அப்படியே மங்களாசாஸனம் செய்து போவதாக ஆளவந்தார் நிர்வஹிப்பராம். அங்ஙனன்றிக்கே எம்பெருமானார் நிர்லஹிப்பதாது, 'நான் பிறந்து பகவத் விஷயத்திலிடுபட்டுப் படாதபாடுகளும் பட்டேன்; இதோ நான் முடிகிறேன்; நான் பட்டபாடு பிறரொருவரும் பட வேண்டா ' என்பதாக. இதிற் காட்டிலும் மவிலக்ஷணமாக பட்டர் நிர்வஹிப்பராம்–இது வரையில் ஆழ்வார் படும்பாடுகளைக் கண்டு, ஐயோ! இவர் இவ்வளவு ஆத்திகளை யடைந்து வருந்துகிறாரே! நமக்கும் கண்டு பொறுக்க முடியாத ஆர்த்தியாயிருக்கிறதே! இவரை எம்பபெருமான் விரைவாக திருவடி சேர்த்துக் கொள்ளலாகாதா? என்று பலர் நினைத்திருந்தார்களாம்; அப்படிப்பட்டவர்களை நோக்கி, இதோ நான் என் ஆர்த்தியெல்லாம் தீர்ந்து முடிந்து போகின்றேன்; என் ஆர்த்தி கண்டு நோவுபட வேண்டாவினி நீங்கள்; ஆனந்தமாக இருங்கள் என்கிறார்–என்பதால்.

English Translation

O Good water-egrets! I desired union with the Vaikunta Lord knowingly. This jewel body has learnt to slip away bit by bit. Now what use flocking around me? May joy descend and reign everywhere!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்