விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பண்புடை வண்டொடு தும்பிகாள்*  பண்மிழற்றேல்மின்* 
    புண்புரை வேல்கொடு*  குத்தால்ஒக்கும் நும்இன்குரல்
    தண்பெருநீர்த் தடம்தாமரை*  மலர்ந்தால்ஒக்கும் 
    கண்பெரும்கண்ணன்*  நம்ஆவிஉண்டுஎழ நண்ணினான் 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நும் இன் குரல் – உங்களுடைய இனிய குரலானது
புண் இரை வேல் கொடு குத்தால் ஒங்கும் – புண்ணின் புரையிலே வேலைக் கொண்டு குத்தினாற்போலேயிரா நின்றது
பண் மிழற்றேன்மின் – பண்பாடு தலைத்தவிருங்கள்
தண் பெரு நீர் தடம் – குளிர்ந்து நிரம்பின நீரையுடைய தடாகம்
தாமரை மலர்ந்தால் ஒக்கும் – தாமரை மலரப் பெற்றாற்போலேயாய்

விளக்க உரை

மதுவைப் பருகிக் களித்துப் பாடுகிற சில வண்டுகளையும் தும்பிகளையுங் குறித்து உங்கள் தொனி என்னால் பொறுக்கப் போகிறதில்லையே; பாடாதே கொள்ளுங்கோள் என்கிறாள். பண்புடை வண்டொடு தும்பிகாள்! பண்மிழற்றேன்மின்=நான் வளர்த்த குயில் நோலே நீங்கள் நன்றி கெட்டவர்களன்றே; நீங்கள் சிறந்த தார்மிகளல்லவா? என்று, இரக்கம் பிறக்கும்படி கொண்டாடிப் பேசுகிறாள் பண்புடை வண்டென்று, பண்பாவது நீதி நீங்கள் நீதி தவறாதவர்களாகையாலே உங்களுக்கு நான் அதிகம் சொல்ல வேண்டா வேன்றபடி. பண்மிழற்றுகையாவது ஆலாவனை செய்கை. சொற்கள் நன்கு விளங்கும்படி பாடுவதைக் காட்டிலும் சொல் தெரியாமலே ஆலாபனை செய்வதுதான் நெஞ்சை அதிகமாக் கவர்வது; அங்ஙனே பண்மிழற்றுதல் வேண்டா வென்று இரக்கிறாள். 'பண்புடை' என்று பாடமல்லாமல் 'பண்புரை' என்று பாடமிருப்பதாகவும் நம்பிள்ளை காட்டுகின்றனர் ; அப்போது பண்பு உரை என்றாகி அழகிய முரலுகையையுடைய வண்டுகளென்றபடியாம். பண்புரைவேல்கொடு குத்தாலொக்கும் நும் இன்குரல்= பண்டே குயில் மயில் முதலானவற்றின் தொனியாலே புண்பட்டிருக்கிற வுயிரிலே வேலைக் கொண்டு குத்தினாற்போலே யிரா நின்றது உங்களுடைய இனிமையான குரல்; ஆதலால் பண்மிழற்றேன்மின் என்று கூட்டுக. இங்ஙனே சொல்லக்கேட்ட வண்டுகளும் தும்பிளும் "நாங்கள் எம்பெருமானது திருநாமங்களைத்தானே பாடுகிறோம் ; இது உனக்கு உத்தேச்யந்தானே ; அஸஹயமாதென்? " என்ன. அதற்குச் சொல்லுவன் பின்னடிகள். 'எம்பெருமானும் நானும் கூடியிருந்து கேட்க வேண்டிய பாட்டைப் பிரிந்திருந்து கேட்க முடியுமோ? அவன் தன்னழகைக் காட்டி என்னை மாய்த்துப் போனானே! இந்நிலையிலே எனக்கு உங்கள் பாட்டு எப்படி ஹையமாகும்' என்கிறாள். தண் பேருநிர்தடந்தாமரை மலர்ந்தாலோக்குங் கண் பெருங் கண்ணன்=குளிர்ந்து அகாதமான நீரையுடைய பொய்கையிலே தாமரைப்பூ அலர்ந்தாற்போலேயாய் அவ்வளவேயன்றி எல்லைகாண வெண்ணாத பெருமையை யுடையனவான கண்களையுடைய கண்ணபிரான், கம்மலாவியுண்டு எழ நண்ணினான்=அவ்வடிவழகைக் காட்டி என்னை முடித்துப் பிரிந்து போனானே; இந்த மையத்திலோ நீங்கள் இன்குரல் மிழற்றுவது!

English Translation

O Bumble-bees! Do not hum, your music drills into my wound. My Lord Krishna of dark hue, with large eyes like a lotus blossom in a large lake, comes only to rob me of my life

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்