விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சீயினால் செறிந்துஏறிய புண்மேல்*  செற்றல்ஏறிக் குழம்புஇருந்து*  எங்கும்- 
  ஈயினால் அரிப்புஉண்டு மயங்கி*  எல்லைவாய்ச்சென்று சேர்வதன்முன்னம்*
  வாயினால் நமோநாரணா என்று*  மத்தகத்திடைக் கைகளைக்கூப்பிப்* 
  போயினால் பின்னை இத்திசைக்கு என்றும்*  பிணைக்கொடுக்கிலும் போகஒட்டாரே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சீயினால் - சீயாலே
செறிந்து எறிய - மிகவும் நிறைந்த
புண்மேல் - புண்ணின்மேல்
செற்றல் ஏறி - ஈ இருந்து முட்டையிட்டு
குழம்பிருந்து - அலைபுழுத்து சீராய்ப்பாயுமளவில்

விளக்க உரை

“தீண்டாவழும்புஞ் செந்நீருஞ் சீயுநரம்புஞ் செறிதசையும் வேண்டாநாற்றமிகு முடலை” என்ற ஐயங்கார் பாசுரத்தின்படி- பற்பல அஸஹ்யங்களுக்கு ஆகாரமான இவ்வுடம்பின் வேதனைக்கனத்தினால் மயக்கமுற்று மரணமடைவதற்கு முன், வாயாலே திருவஷ்டாக்ஷரத்தை அநுஸந்தித்துக் கொண்டு முடிமேல் கைகூப்பித் தொழுமவர்கள் பரமபதம்போய்ச் சேருவர்களென்பதில் இதையும் ஐயமில்லை; அப்படி அவர்கள் அங்குப்போய்ச் சேர்ந்த பின்னர் “இவர்கள் இரண்டு நாளைக்குப் பூமண்டலத்தில் இருந்து வரட்டும்; மீண்டு வருவர்களோ என்று சில நித்யஸூரிகள், தங்களை ஈடு கட்டினாலும், அவர்களை அவ்விடத்திலிருந்து இந்தப் பிரகிருதி மண்டலத்துக்கு அனுப்பவல்லார் யாருமில்லையென்கிறார்; இதனால் ஒழிவில் காலமெல்லா முடனாய்மன்னி. வழுவிலாவடிமை செய்யப்பெறுவர் என்றவாறு. “இத்தால், கர்மமடியாக மீட்சியில்லையென்றபடி” என்ற வியாக்கியாநவாக்கியமும் அறியத்தக்கது.

English Translation

Pus will ooze from festers, maggots will wriggle on bed sores all over, ants will bite and the mind will slip into coma, when the last moments arrive. Before that happens, join your hands over your head and chant Namo-Narayana. Go, and you will never come again this way, guaranteed.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்