விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இத்தனை வேண்டுவதுஅன்றுஅந்தோ!*  அன்றில் பேடைகாள்* 
    எத்தனை நீரும் நும்சேவலும்*  கரைந்துஏங்குதிர்*
    வித்தகன் கோவிந்தன்*  மெய்யன்அல்லன் ஒருவர்க்கும்* 
    அத்தனைஆம் இனி*  என்உயிர் அவன்கையதே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்றில்பேடைகாள் – பெண்ணன்றிற் பறவைகளே
நீரும் நும் சேவலும் – நீங்களும் உங்கள் சேவல்களும்
எத்தனை கரைந்து ஏங்குதிர் – எவ்வளவோ கரைந்து உருந்துகிறீர்களே
இத்தனை வேண்டுவது அன்று – என்னைக் கொலை செய்ய இத்தனைபாரிப்பு வேண்டியதில்லை!;
அந்தோ – ஐயோ, எதுக்கு இவ்வளவு பாரிப்பு?

விளக்க உரை

சிலஅன்றிற் பேடைகளை நோக்கி நீங்கள் உங்களுடைய ஆண்களோடே கூடிக்கொண்டு இனிமையான கூஜிதங்களைச் செய்து அதனாலே என்னை நலிகின்றீர்களே இது நியாயமா? இப்படி நலிய வேண்டா–என்று இரக்கிறாள். அன்றில் என்பது ஒரு பறவை; குரரீ என்று வடமொழியிற் கூறப்படும்; க்ரௌஞ்ச மென்னவும் படும். அது பெரும்பாலும் பனைமரத்தில் வாழும். அது எப்பொழுதும் ஆணும் பெண்ணும் இணை பிரியாது நிற்கும்; கணப்பொழுது ஒன்றை ஒன்று விட்டு பிரிந்தாலும் அத்துயரத்தைப் பொறுக்க கில்லாமல் ஒன்றை ஒன்று இரண்டு மூன்று தரம் கத்திக் கூவி, அதன் பின்பும் தன் துணையைக் கூடாவிடின் உடனே இறந்துபடும். ஆணும் பெண்ணுமான அந்த அன்றிற் பறவை இணை பிரியாமல் நெருங்கி ஒன்றோடொன்று லாயலசைக் கோத்துக் கொண்டு உறங்கும் பொழுது அவ்வுறகத்தில் வாயவகு தன்னில் நெகிழ்ந்த வளவிலே துயிலுணர்ந்து அப்பிரிவைப் பொறாமல் மெலிந்து பெருந்தொனியாக மிக இரங்கத்தக்க சிறு குரல் செய்து விரஹிஜனங்களின் செவியில் விழுந்தால், பொறுக்க முடியாத துன்பமாகும். பெரிய திருமடலில், "பெண்ணைமேல் பின்னுமவ்வன்றில் பெடைவாய்ச் சிறு குரலும், என்னுடைய நஞ்சுக்கோ ரீர்வாளா மென் செய்கேன்!" என்றதுங் காண்க. பெரிய திருமொழியிலும் "காவார் மடற் பெண்ணை யன்றிலரி குரலும், ஏவாயினூடியங்கு மெஃகில் கொடிதாலோ" என்றாற் போன்ற பாசுரங்கள் பலகால் வருவது காண்க. அன்றிற் பேடைகாள்! இத்தனை வேண்டுவதன்று+என்னை முடிக்கைக்கு இத்தனை வேண்டுவதில்லையே. குயில்களின் தொனியிலேயே உயிரை இழந்து கொண்டிருக்கிற என்மேல் அன்றில்களான நீங்கள் உங்களுடைய தொனியையும் செலுத்திப் பிராயசப்பட வேண்டுமோ? பூசல் செய்து கொள்ளை கொள்ளும் கள்ளர் காலிலே விழுந்து ஐயோ! என்பாரைப்போல இங்கு ஆழ்வார் அந்தோ! என்கிறார். சரணம் என்ற வாயை அம்பாலே நிறைக்கலாமோ? என்பது இதன் கருத்தாம். இப்படி சொல்லக்கேட்ட அன்றில் பேடைகள் 'நாங்கள் என் செய்தோம்?' என்ன எத்தனை நீரும் நுஞ்சேவலும் கரைந்தேங்குதிர் என்கிறான். சேவலில் கருத்தறிந்து பரிமாறுகிற உங்கள் சேவலும் ஸம்ச்லேஷ ரஸத்தாலே உள்ளழிந்து கூக்குரவிடுகிறீர்களே! இதைக் காட்டிலும் வேறு நலிவு உய்டோ வென்கிறாள். எத்தனை யென்றது–மிகவு மென்றபடி. இப்படி சொல்லக்கேட்ட அன்றிற் பேடைகள் ' அம்மா பராங்குச நாயகீ ! உன்னோடு கலவியே தாரகமாயிருக்கிற வெம்பெருமான் ஒரு கணப்பொழுது பிரியுமளவில் அவனே எங்களை யிட்டு நலிவிக்கிறானாக இங்ஙனே கொடுமை சொல்ல வேணுமோ? இது தகுமோ? சற்றுப்போது பொருத்திருந்தால் அவன் தானே வருகிறான்' என்று சொல்ல; அதற்குச் சொல்லுகின்றாள் வித்தசன் கோவிந்தன் மெய்யனல்ல னோருவர்க்கும் இத்யாதி. வித்தகன்–இதுவரையில் பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய வித்தகன என்றிருந்தோம்; இப்போது பத்துடை யடியவர்க்கு அரியனான வித்தகன் என்று முடிவு செய்தோம் என்பதாகத் தெரிவிகிறது. இங்கே ஈடு; – ["வித்தகன்"] விஸ்மயநீயன். இப்போது அநுகூலர்க்கு அரிய வித்தகன், [கோவிந்தன்] ஸர்வரக்ஷகன், இத்தால்–ரக்ஷகரைப்போலே யிருந்து பாதகனாமவன். ரக்ஷகனென்று பற்றப் போகாது".என்று. மெய்யனல்லன் ஒருவர்க்கும்–"மெய்யர்க்கே மெய்யனாகும் – பொய்யர்க்கே பொய்யனாகும்" (திருமாலை) என்றார் ஓராழ்வார்; இவர், ஒருவர்க்கும் மெய்யனல்ல னென்கிறார். "ராமாவதாரத்தில் மெய்யும் க்ருஷ்ணாவதாரத்தில் பொய்யுமிறே ஆச்ரிதர்க்குத் தஞ்சம்" என்றாயிற்று நம் ஆசாரியர்களின் உறுதி. "அத்தனையாமினி என்னுயிரவன்கையதே" என்றது "இனி என்னுயிர் அவன் கையதே யாமத்தனை" என்றபடி. 'என்னுயிர் நோவ மிழற்றேன்மின்' என்று லேண்டச்செய்தேயும் அவை கூவுகை தவிராமையாலே, இனி நான் முடிந்தேனத்தனை யென்றாளாயிற்று.

English Translation

O Lady heron! How melancholically you and your mate converse! You need not have tried so hard. Alas, the trickster. Govinda is no true lover, that is it. Now my life is already in his hands

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்