விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆறாமதயானை*  அடர்த்தவன்தன்னை* 
    சேறுஆர்வயல்*  தென்குருகூர்ச் சடகோபன்*
    நூறேசொன்ன*  ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்* 
    ஏறேதரும்*  வானவர்தம் இன்உயிர்க்கே   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆறாமதம் யானை – ஒரு நாளும் மாறாத மதத்தையுடைய குவலயாபீட யானையை
அடர்த்தவன் தன்னை – பங்கப்படுத்தின பெருமானைக் குறித்து
சேறு ஆர் அயல் குருகூர் சடகோபன் – சேறு மிக்க வயலை யுடைத்தான தென் குருகூர்க்குத் தலைவரான ஆழ்வார்
நூறே சொன்ன – நூறு நூறாக வருளிச் செய்த
ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் – ஆயிரத்தினுள்ளே இப்பதிகமானது

விளக்க உரை

இப்பதிகம் வானவர்தமின்னுயிர்க்கு ஏறேதருமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். இதற்குப் பல படியாகப் பொருளுரைப்பர்; ஏறு என்று இடபத்திற்கு வாசகமாய் "புருஷர்ஷப ; புருஷபுங்கவ :" என்னப்படுகிற ஸர்வேச்வரனைச் சொல்லிற்றாகி, அவனை இப்பதிகம் தரும்–அதாவது ••• – ப்ரஹமவிதாப்நோதி பரம் என்று உபநிஷத்து ஓதிய பலனைத் தருமென்றபடி, அன்றியே, ஏறு என்று புண்பாடு ; நித்யஸுரிகளின் ஹிருதயத்தைத் தன்னுடைய ஒப்பற்ற போக்யதையாலே புண்படுத்தும் ; அவர்களை வித்த ராக்குமென்றவாறு, அன்றியே அவர்களினுள்ளத்திலே ஏறி நிற்கு மென்னவுமாம். ஆறாமதயானையடத்தவெனன்று இங்குச் சொன்னது–அதுபோலே தமக்கு ப்ரதி பந்தக நிவ்ருத்தியைப் பண்ணிக்கொடுத்தமை சொன்னவாறு, சேறார்வயல் என்றது–எப்போதும் உழுது நடுவதாகிற வயலின் வளத்தைச் சொன்னபடி. அவ்வூர் ஸம்ஸாரிகளுக்கு அன்னமளிக்குமாபோலே அவ்வூர்த் தலைவரான ஆழ்வார் முமுக்ஷீக்களுக்கு அன்ன மளிக்கிறபடி. ஆசார்ய ஹருதயத்தில் (215) "நூறே சொன்ன பத்து நூறு ஓராயிர மெனற்தும் ஸாபிப்ராயம்" என்றது இங்கே அநுஸந்நேயம். ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு கருத்திருப்பதுபோலவும், ஒவ்வொரு பதிகத்திற்குமொரு கருத்திருப்பதுபோலவும், ஒவ்வொரு நூறுக்கும் ஒவ்வொரு கருத்துண்டாமையாலே "நூறே சொன்ன" என்கிறது. முதல் நூறுக்குப் பரத்வத்திலே நோக்கு; இரண்டாவது நூறுக்குக் காரணத்வத்திலே நோக்கு; மூன்றாவது நூறுக்கு வ்யாபகத் வத்திலே நோக்கு; நான்காவது நூறுக்கு நியந்த்ருத்வத்திலே நோக்கு; ஐந்தாவது நூறுக்குக் காருணிகத்வத்திலே நோக்கு; ஆறாவது நூறுக்கு சரண்யத் வத்திலே நோக்கு; ஏழாவது நூறுக்கு சக்தத்திலே நோக்கு; எட்டாவது நூறுக்கு ஸத்யகாமத்வத்திலே நோக்கு; ஒன்பதாவது நூறுக்கு ஆபத்ஸகத்வத்திலே நோக்கு; பத்தாம் பத்துக்கு ஆர்த்தி ஹரத்வத்திலேநோக்கு – என்றிப்படி நிதானமறிந்து வகுப்பார்கள் நம் ஆசாரியர்கள்.

English Translation

This decad of the thousand songs by kurugur satakopan of tertile fields sung for the Lord who killed the rutted elephant grants the Lord himsef, -the soul of the gods

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்