விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அடியான் இவன்என்று*  எனக்குஆர்அருள்செய்யும் 
    நெடியானை*  நிறைபுகழ் அம்சிறைப்*  புள்ளின்
    கொடியானை*  குன்றாமல்*  உலகம்அளந்த 
    அடியானை*  அடைந்து அடியேன்*  உய்ந்தவாறே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இவன் அடியான் என்று – இச்சடகோபன் நமக்கு அடிமைப்பட்டவன் என்று கொண்டு
எனக்கு ஆர் அருள் செய்யும் செடியானை – என் விஷயத்தில் பேரருள் புரியும் ஸர்வேச்வரனாய்
நிறை புகழ் அம்சிறை புள்ளின் கொடியானை – நிறைந்த புகழோடுகூடி அழகிய சிறகையுடைய கருடனைக் கொடியாகவுடையனாய்
குன்றாமல் உலகம் அளந்த அடியானை – ஒன்றுவிடாமல் உலகம் முழுவதையுமளந்து கொண்ட திருவடியையுடையனாயிருக்கு மெம்பெருமானை
அடியேன் அடைந்து உய்ந்த ஆறே – அடியேன் கிட்டி உஜ்ஜீவிக்கப் பெற்ற விதம் என்னே!

விளக்க உரை

தாம் உஜ்ஜீவிக்கப்பெற்ற படியைப் பேரானந்தம் பொலியப் பேசுகிறார் எம்பெருமான் ஆழ்வார் பக்கலிலே செய்த பரமக்ருபை நிர்ஹேதுகமென்று முதலடியில் காட்டப்படுகிறது. "அடியானிவன் என்று" என்றதனால், உண்மையில் தாம் அடியவரல்லரென்பதும், அடியவரென்று அவன் ஆரோபித்துக் கொண்டானென்பதும் தெரிவிக்கப்பட்டதாகிறது. 'ஆழ்வார் பக்கலிலே என் அத்தனையருள் செய்தாய்?' என்று யாரேனும் கேட்டால் 'அவர் எனக்கு அடியவராயிருந்தபடியினாலே' என்று அவர்களுக்கு ஒரு மறுமாற்றஞ் சொல்வதற்காக அடியானிவனென்று ஏறிட்டுக் கொண்டு அருள்செய்தானென்கிறார். ஸ்தோத்ர ரத்னத்தில் 'வாயஸஸ்ய ப்ரணத இதி தயாலு' என்றவிடத்து (இதி) என்றதை ஈண்டு ஒப்புநோக்குக. எனக்காரருள் செய்யும் நெடியானை=நெடியான் செய்கிறவருள் எப்படியிருக்கு மென்பதை நம்பிள்ளை காடுகிறார் காண்மின்–"கொள்ளுகிற என்னளவன்றிக்கே தன்னளவிலே உபகரித்த ஸர்வேச்வானை" என்று. இது, சொல் நரம்பைப் பிடித்து ஆழ்ந்து அருளிச் செய்த சீரிய பொருள். உலகிலுள்ள மஹாதனிகர்கள் தானம் பண்ணுவதுண்டே; அவ்யப தேச்யர்கள் வந்து இரந்தால் அவர்களுக்கு அற்பம் கொடுப்பதும், சீரியர் வந்து கேட்டால் அவர்களுக்குச் சிறப்பாகக் கொடுப்பது மியல்வு. எம்பெருமானோவென்னில், கொள்ளுகிறவர்களின் சிறுமை பெருமைகளில் கண்வையாதே தன் பெருமைக்குத் தக்கவாறு கொடுப்பவனாம், இப்பொருள் "அருள் செய்யும் நெடியானை" என்கிற சொற்சேர்க்கையாற்றலால் கிடைக்கும். இப்படியருள் செய்பவனென்பதற்கு இரண்டு உதாஹரணங்கள் காட்டுவார் போன்று இரண்டு விசேஷணங்களிடுகிறார்; நிறைபுகழஞ்சிறைப் புள்ளின் கொடிணானை– ••• தாஸஸ் ஸகா வாஹநமாஸநம் த்வஜோ யஸ்தே விதாநத் வியஜநம் த்ரயீமய; என்று ஆளவந்தாரருளிச் செய்தபடியே, பெரிய திருவடியை அடியவனாகவும் நண்பனாகவும் ஊர்தியாகவும் ஆஸனமாகவும் கொடியாகவும் விதானமாகவும் விசிறியாகவும் கொள்ளுகைக்குரிய அருள்செய்தவனென்க : இதுவாயிற்று அவனுக்கு நிறை புகழ். குன்றாமல் உலகமளந்த வடியானை–உறங்குகிற ப்ரஜையைத் தானறிந்த ஸம்பந்தமே காரணமாகத் தாய் அணைத்துக் கொண்டு கிடந்து முலைகொடுத்துக் காக்குமாபோலே செய்த செயலன்றோவிது. 'எம்பெருமான் திருவடி நம் தலைக்கு அணியாகவேணும்' என்கிற ப்ரார்த்தனையும், 'அது நமக்கு ப்ராப்தமாகிறது' என்கிற எண்ணமு மில்லாதார்கன்றோ இப் பொருள் செய்தது. ஆக இப்படி எதிர்த்தலையைப் பாராமல் தன்னையே பார்த்து அருள் புரியும் ஸர்வேச்வரனை நான் அடிபணிந்து உஜ்ஜீவித்தவகை மற்றொருவர்க்கு நிலாமோவென்று சொல்லித் தலைக்காட்டினாராயிற்று.

English Translation

The Lord who bears the Garuda banner keeps me as his servant. His feet once strode the Earth and all, what a wonder, I have found him!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்