விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்டுகொண்டு*  என்கண்இணை ஆரக்களித்து* 
    பண்டைவினையாயின*  பற்றோடுஅறுத்து*
    தொண்டர்க்கு அமுதுஉண்ணச்*  சொல்மாலைகள் சொன்னேன்* 
    அண்டத்துஅமரர் பெருமான்!* அடியேனே.       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

களித்து – ஆனந்தித்து
பண்டை வினை ஆயின – அநாதி விரோதிகளான எல்லாவற்றையும்
பற்றோடு அறுத்து – வாஸனையோடே போக்கி
அண்டத்து அமரர் பெருமான் அடியேன் – நித்யஸுரி நாதனுக்கு அடியேனான நான்
தொண்டர்க்கு அமுது உண்ண – பக்தாம்ருதமாக

விளக்க உரை

தரம் அநுபவித்து ஆனந்திப்பதிற்காட்டிலும் பிறரையும் அநுபவிப்பித்து ஆனந்திருப்பது ஒப்புயர்வற்ற ஆனந்தமாதலால் அவ்வானந்தமும் தமக்கு ப்ராப்தமானபடியை இப்பாட்டிலருளிச் செய்கிறார். "தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்" என்ற மூன்றாமடி இப்பாட்டுக்கு உயிராயிருக்கும். நாம் கண்ணிணையாரக் கண்டு கொண்டு களித்ததும், பண்டை வினைகளையெல்லாம் பற்றோடறுத்ததும் ஒருபெரிய ஆனந்தமன்று திருவாய்மொழி பாடினமுகத்தாலே ஸ்ரீவைஷ்ணவர்களுக்கெல்லாம் உபகாரராகப் பெற்ற விதுவன்றோ பிறர்க்குப் பெறவரிதான ஆனந்தம். இவ்வுலகில் கவிபாடினவர்கள் மற்றும்பலருமுண்டாகிலும், இப்படி "தொண்டர்க் கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்" என்று பெருங்களிச்சியாகப் பேசினவர் பிறராருமிலர். தம்முடைய திருவாய்மொழி திருப்புளியாழ்வாரடியிலே சுவறிப் போகாமல் காருள்ளளவும் கடல்நிருள்ளளவும் வேதமுள்ளளவும் தேவகீதனுள்ளளவும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுதமாய்ப் பரமபோக்யமாய் விளங்கப்போகிற தென்பதை ஆழ்வார்கண்டறிந்து அருளிச்செய்தது அதிசயிக்கத்தக்கது. திருவாய்மொழிக்குத் தனியனிடத்தொடங்கின ஸ்ரீமந்நாதமுனிகள் தொடங்கும்போதே பக்தாம்ருதம் என்றருளிச்செய்தது இந்தப் பாசுரத்தை யுட் கொண்டேயாம். முதலிலேயே (1–5–11) பாலேய்தமிழரிசைகாரர் பத்தர் பரவுமாயிரம் என்று அருளிச்செய்திருந்தாலும் தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் என்கிற இப்பாசுரம் இணையற்றது. கீழ் ஏழாம்பத்தில் என்றைக்குமென்னை யென்கிறபதிகத்தில், இத்திருவாய்மொழி பாடுகையில் தமக்கு அந்வயமில்லையென்றும் எம்பெருமானே தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்னதென்றும் அருளிச்செய்தார்; மேலே பத்தாம்பத்திலும் பண்ணார்பாடலின் கவிகள்யானாய்த் தன்னைத் தான் பாடி என்று அதனையே வற்புறுத்துகிறார்; இவற்றினிடையே "சொன்மாலைகள் சொன்னேன்" என்று உண்மையை வெளியிட்டுரைத் தவிது நம்போல்வாருடைய பரமபாக்யமேயன்றோ.

English Translation

I see the Lord before myself, My heart ha sung his songs delightful to devotees! My Karmic bonds are broken

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்