விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உகந்தேஉன்னை*  உள்ளும் என்உள்ளத்து அகம்பால்* 
    அகம்தான் அமர்ந்தே*  இடம்கொண்ட அமலா*
    மிகும்தானவன் மார்வுஅகலம்*  இருகூறா* 
    நகந்தாய் நரசிங்கம்அதுஆய உருவே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அகம் நான் ஏமர்ந்து – உள்ளே பொருந்தி
இடம் கொண்ட அமலா – இடங்கொண்டிருக்கின்ற அமலனே
மிரும் தானவன் மார்வு அகலம் – மிடுக்குமிக்க இரணியாசுரனுடைய அகன்ற மார்வை
இருகூறு ஆ – இருபிளவாக்கவல்ல
நகந்தாய் – நகத்தை யுடையவனே

விளக்க உரை

ஒரு கால் தூணிலே வந்து தோன்றி ப்ரஹலாதாழ்வானுடைய ஆர்த்தியைத் தீர்த்தாப்போலே தம்முடைய ஆர்த்தியைத் தீர்த்தருவினதாக நினைத்து ஏத்துகிறார். "என்னுள்ளம் உன்னை உகந்தேயுள்ளும்" என்று கீழ்ப்பாட்டிற் பேசினவதுவே இப்பாட்டிலும் முக்கியமாகப் பேசப்படுகிறது. அநுபவசாஸ்த்ரத்தில் புநருக்தி தோஷம் சங்கிக்க வொண்ணாதே. ஆனந்தாநுபவத்தின் உறைப்பு இருக்கிறபடி. இங்கு ஈடு–பிரிந்து க்லேசத்தோடே தலைக்கட்டு முகப்பன்றிக்கே ஏகரூபமாக வுன்னை யநுபவிக்கும்படி என்று. இதற்குப் பிறகு பிரிவாற்றாமை யுண்டாகிற தில்லையோவென்று சங்கிக்கலாகாது. இப்போதைய ஆனந்தம் எதிர்கால வருத்தத்தைக் கணிசிக்கமாட்டாதன்றோ. நெஞ்சில் அவகாசமுள்ள விடமெங்கும் தானே யாம்படி நிறைந்த ஒளியுருவனே! உன்னை இல்லை செய்தது மாத்திரமன்றிக்கே உன் உயிர் நிலையிலே (ப்ரஹலாதனளவிலே) நலிவுசெய்த செருக்கனுடைய அகன்ற மார்வானது இரண்டு கூறாம்படி பண்ணவல்ல திருவுகிர்களையுடையவனே என்று சொன்ன விதனால், அடியார் ப்ரதிஜ்ஞை செய்த அந்த க்ஷணத்திலேயே வந்து தோற்றினாப்போலே வந்து தோற்றி என்னெஞ்சு நிறையப் புகுந்து என்னை யநுபவிப்பத்தருளினாய் என்றதாயிற்று. உகந்தே யுன்னையுள்ளுமென்று வினைமுற்றாக்கி விடாமல், உள்ளும் என்பதை என் என்பதிலே சிசேஷணமாக அந்வயித்து, உகந்தே உன்னை உள்ளுகின்ற (சிந்திக்கின்ற) என்னுடைய அகம்பாலகந்தான் அமர்ந்தே யிடங்கொண்டவமலா! என்று முன்னடிகளிரண்டையுஞ் சேர்த்து விளியாகக் கொள்வதும் பொருந்தும். அப்போது பாட்டு முழுவதும் விளியாக நிற்கும். வினைமுற்று கீழ்ப்பாட்டிலிருந்து கொண்டு கூட்டத்தக்கது. ஈற்றடிபயின் முதலில், நகத்தாய்! என்றிருக்க வேண்டுவது எதுகையின்பம் நோக்கி 'நகந்தாய்' என்று கிடப்பதாக நம்பிள்ளை திருவுள்ளம். "வல்லெற்றை மெல்லொற்றாக்கிக் கிடக்கிறது" என்பது வியாக்கியானம். பன்னீராயிரவுரைகாரர், "நகம்–நகத்தை, தாய்–தாவும்படி பண்ணின" என்றுரைத்தனர்.

English Translation

O Lord who came as Narasimha and tore apart the wide chest, You live in the core of my hear. My heart rejoices in you

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்