விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அழைக்கின்ற அடிநாயேன்*  நாய்கூழை வாலால்* 
    குழைக்கின்றது போல*  என்உள்ளம் குழையும்*
    மழைக்கு அன்றுகுன்றம் எடுத்து*  ஆநிரைகாத்தாய். 
    பிழைக்கின்றதுஅருள்என்று*  பேதுறுவனே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்று – முன்பொரு காலத்தில்
மழைக்கு குன்றம் எடுத்து – பெருமழையைத் தடுக்கக் கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து
ஆ நிரை காலத்தாய் – பசுக் கூட்டங்களை ரக்ஷித்தவனே!
அருள் பிழைக்கின்றது என்று – உன்னருள் (என்பக்கலிலே) தடுமாறிப் போகின்றதேயென்று
பேது உறுவன் – கலங்கா நின்றேன்.

விளக்க உரை

ஆர்த்தியே செப்பேடாக வந்து ரக்ஷிக்குமவனான உன்னுடைய திருவருளுக்கு நான் புறம்பானேனோ? என்கிறார் அழைக்கின்ற அடிநாயேன் = என்னுடைய தன்மையை நான் நன்கறிந்துள்ளேன்; ஊருண்கேணியிலே கள்ளியை வெட்டியெறிந்தால் அது எப்படி அவத்யமடையுமோ, அப்படியே நான் உன்னைக் கிட்டினால் உனக்கு அவத்யமாகுமென்பதை அறியாதிருக்கின்றேனல்லேன், நன்கறிந்தே யிருக்கின்றேன். ஆனாலும் ருசி வெநுமனிருக்க வொட்டாமையாலே ஆர்த்தியாலே கூப்பிடாநின்றேன். உலகில் நாயானது தன்னுடைய தலைவனுக்குத் தன் ஆவலைத் தெரிவிப்பது தன் வாலினாலன்றோ; அந்த வால் குட்டையானால், தெரிவிக்கை அரிதாம் ; ஐயோ தெரிவிக்க முடியவில்லையே யென்று நோவு பட்டுக் கிடக்கும் ; அதுபோல என்னுள்ளமும் நோவுபட்டுக் கிடவா நின்றது என்கிறார். இங்குக் காட்டின த்ருஷ்டாந்தத்தினால் இரண்டு வகையான கருத்துத் தேறும் ; ஆழ்வாருடைய திருவுள்ளத்திலோடுகிற கிலேசம் வாய்விட்டுத் தெரிவிக்க முடியாதது என்பதொன்று; நாய் ஸா தனமில்லாமல் கிலேசப்படுவதுபோல, தாமும் ஸாதனமில்லாமல் கிலேசப்படுவதாகச் சொல்லுதல் மற்றொன்று. இப்படி சொல்லக்கேட்ட எம்பெருமான் 'கைம் முதலில்லையென்று தெரிந்து கொண்ட நீர் என்னை வடிம்பிடுவதேன்?' என்ன ; பின்னடிகளால் அதற்கு மறுமாற்ற முரைக்கின்றார் ; இந்திரன் பசிக்கோபத்தினால் ஏழுநாள் விடாமழை பெய்வித்த போது குன்றமேந்திக் குளிர் மழை காத்த மஹா குணத்தையும் மஹா கருணையையும் நம்பியன்றோ நாங்களிருப்பது. அத்திருவருள் பசுக்களுக்குத் தான் என்று ஒரு நியதி யுண்டோ? என்போல்வாரிடத்தில் அது ப்ரஸரிக்கக் கூடியதுதானே! அக்குணத்திற்கு நான் புறம்பாகிறேனோவென்று கலங்காநின்றேனென்கிறார்.

English Translation

Like a lowly dog that wags, its fall, I call, with my heart melting. Then you protected herds with a hill I fear your grace has missed me

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்