விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மையார்கருங்கண்ணி*  கமல மலர்மேல்* 
    செய்யாள் திருமார்வினில்சேர்*  திருமாலே*
    வெய்யார்சுடர்ஆழி*  சுரிசங்கம்ஏந்தும்*  
    கையா உன்னைக்காணக்*  கருதும் என்கண்ணே.    (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மை ஆர் கருகண்ணி – மையணிக் கருங்கண்களையுடையவளும்
கமலம் மலர் மேல் – தாமரைப் பூவின் மேலிருப்பவளுமான
செய்யாள் – சிவந்த நிறமுடைய பிராட்டி
திருமார்வினில் சேர் – திருமார்பிலே சேரப்பெற்ற
திருமாலே – ச்ரிய பதியே

விளக்க உரை

பெரிய பிராட்டியாரோடும் திவ்யாயுதங்களோடுஞ் சேர்ந்த சேர்த்தியைக் காண்பதற்குத் தமது கண்கள் விடாய்த்திருக்கிறபடியைப் பேசுகிறாரிதில். *** வைகுண்டே து பரே லோசே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதிய ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர்பாகவதைஸ் ஸஹ என்றோதப்பட்ட நிலைமையைக் கண்டு களிக்க வேணுமென்கிறாராயிற்று. மையார்கருங்கண்ணி = ஆச்ரயணகாலமென்றும் அநுபவகால மென்றும் இரண்டு மையங்களுண்டு; ஆக்ரயண காலத்தில் பிராட்டியைப் புருஷகாரமாகக் கொள்ளவேணும் அநுபவ காலத்தில் அவளும் அவனுமான சேர்த்தியிலே அடிமை செய்ய வேணும். ஆக இரண்டு தசையிலும் பிராட்டியின் ஸம்பந்தம் அவர்ஜநீயமாயிருக்கையாலே மையத்திற்கு தகுந்தபடி உபயோகப்படுவதற்காகப் பிராட்டி நித்யோக முடையளாயிருப்பன். ஆச்ரயண காலத்தில் சேதநர்களைக் குற்றங்கண்டு சீறாமல் அங்கீகரிக்கச் செய்வதற்காக முதலிலே எம்பெருமானுக்கு உபதேசங்கள் செய்வள். அந்த வுபதேசங்கள் பவிக்கமாற் போமளவில் தன்னழகைக் காட்டி அதிலே அவனை யீடுபடுத்தித் தன்சொற்படி உடக்கச் செய்வேன். இவ்விஷயத்தை ஸ்ரீவசக பூஷணத்திலருளிச் செய்யுமிடத்து "உபதேசத்தாலே மீளாதபோது ... ஊச்வரனை அழகாலே திருத்தும்" என்கிறார் பிள்ளை லோகாச் சாரியர். அவ்விடத்து வியாக்கியானத்தில் மணவாள மாமுனிகள்–"ஈச்வரனை அழகாலே திருத்துகையவது–ஒங்ராண்போ, உனக்குப் பணியன்றோவிது" என்று உபதேசத்தை யுதறினவாறே கண்ணைப் பாட்டுதல் கச்சை நெகிழ்தல் செய்து தன்னழகாலே அவனைப் பிச்சேற்றித் தான் சொன்னபடி செய்ய நல்லது நிற்கமாட்டாதபடி பண்ணி அங்கீகாரோந் முகனாக்குகை என்றருளிச் செய்கிறார். ஆகவே நம்முடைய வாழ்ச்சிக்குப் பிராட்டியில் திருக் கண்களே மூலகாரணமாதலால் அக் கண்ணழகை முந்துறப் பேசுகிறார். ஸ்ரீராமாயணத்தில் 'அஸிதேக்ஷணு' என்று பவகானுஞ் சொல்லுகிறபடியே பிராட்டி இயற்கையாகவே கருங்கண்ணி மையிட்டுக் கருமை ஸம்பாதிக்க வேண்டியதில்லை. ஆயினும் மங்கள ஈர்த்தமாகவே மையிடுகிறபடி.

English Translation

Lord who sports the dame with dark eyes on his chest, Lord of conch and discus! My eyes pine to see you

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்