விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இன்றிப்போக*  இருவினையும்கெடுத்து* 
    ஒன்றியாக்கைபுகாமை*  உய்யக்கொள்வான்*
    நின்றவேங்கடம்*  நீள்நிலத்துஉள்ளது, 
    சென்றதேவர்கள்*  கைதொழுவார்களே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வேங்கடம் – திருவேங்கடமலை
நீள் நிலத்து உள்ளது – பரந்த இவ்வுலகத்தே யுள்ள தொன்றாம்
சென்று – (அங்கே) சென்று சிட்டி
கை தொழுவார்கள் – கை தொழுமலர்கள்
தேவர்களே – (மநுஷ்யான்றிக்கே) தேவர்களேயாவர்.

விளக்க உரை

மாசுவைகுந்தம் காண்பதற்கு மனோரதங்கொண்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ஆழ்வீர் ! சரீரஸம்பந்த மற்ற பின்பு போய் அநுபவிக்கும் பரமபதத்தையா விரும்புகிறீர்; இந்த சரீரத்தோடேயநுபவிக்கும் திருமாலை இந்நிலத்தேயுள்ளதன்றோ; இதை விட்டு மாகவைகுந்தங்காண வாசைப்படுவதில் என்ன விசேஷம்? என்ன; இது வாஸ்தவமே; திருவேங்கடமலை இந்நிலத்தேயுள்ளது தான். அதனாலெனக்கென்ன? காலாழும் நெஞ்சழியும் கண்சுழலுமென்றிருக்கிற நான் திருமலையில் சென்று அநுபவிக்க பாக்யஹீநனன்றோ தேவர்களேயன்றோ அங்குச் சென்று தொழுவார்; ஆகவே திருமலையோடு பரமபதத்தோடு வாசியில்லையே யெனக்கு என்கிறார். இருவினையும் அன்றிப்போகக் கெடுத்து–புண்ணிய மென்றும் பாவமென்றும் இரு வகைப்பட்ட கருமங்களரனவை வாஸகையோடேபோம்படி பண்ணியென்றபடி பாவம் போலே புண்யமும் கழியவேணும். பாவம் கரகத்திலே கொண்டு சேர்க்கும் புண்யம் ஸ்வர்க்கத்திலே கொண்டு சேர்க்கும். முமுக்ஷுக்களுக்கு ஸ்வர்ககத்தோடு நரகத்தோடு வாசியற்றிருக்கையோலே பாம்போலே புண்யமும் ஹேயுமாகிறது. *** –ததா வித்வாக் புண்யபாபே விதூயக என்று உபநிஷத்தும் ஓதிற்று. அநுபவித்தே அறவேண்டிய இவ்விருவினைகளை எம்பெருமான் க்ருபாவிசேஷத்தாலே அறுத்தொழிப்பது சில அதிகாரி விசேஷங்களிலே யென்க. ஒன்றி ஆக்கை புகாமை = அவ்விருவினைகளில் பின்னையும் ருசி வாஸநைகள் கிடக்குமாகில் யாதாணுமோராக்கையில் புக்கு அங்காப்புண்டு தடுமாற வேண்டிவருமே; அதற்கு ப்ரஸக்தியில்லாத படி செய்து உய்யக்கொள்வான் நின்ற வேங்கடம் = இப்படியாக உஜ்ஜீவிப்பத்தருளுமெம்பெருமான் அளஸரமெதிர்பார்த்து நிற்குமிடமான திருமலையானது நீணிலத்துள்ளது – சிறந்த இந்நிலவுலகத்தில் தானுள்ளது. இது நாம் அறியாததன்று அறிந்தே யிருக்கிறோம். ஆனாலும் அங்குச் சென்று அநுபவிக்கும் பாக்கியமில்லாமையே பற்றியே கரைய வேண்டிற்றாகிறது. காலுமெழா கண்ணநீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி யென்னும்படி யிருப்பார்க்குத் திருமலைகொண்டு காரியமென்? சென்று தேவர்களின் கை தொழுவார்களே = அங்குச் சென்று கை தொழுமலர்கள் மநுஷ்யர்களாக இருக்க முடியாதே; தேவர்களாகவன்றோ இருக்க வேண்டும்.

English Translation

Destroying pairs of opposites, he gives liberation from rebirth; he resides in Venkatam where gods worship him

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்