விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நோக்கி யசோதை*  நுணுக்கிய மஞ்சளால்* 
  நாக்கு வழித்து*  நீராட்டும் இந் நம்பிக்கு*
  வாக்கும் நயனமும்*  வாயும் முறுவலும்* 
  மூக்கும் இருந்தவா காணீரே* 
   மொய்குழலீர் வந்து காணீரே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அசோதை - யசோதைப்பிராட்டி;
நோக்கி - (கண்ணபிரான்திருமேனியின் மென்மைக்குத் தக்கப்படி) பார்த்து ஆராய்ந்து;
நுணுக்கிய - அரைத்த;
மஞ்சளால் - மஞ்சட்காப்பாலே;

விளக்க உரை

உரை:1

மிகவும் மென்மையான அவையங்களைக் கொண்டவன் கண்ணன். அவனது மென்மையான நாக்கிற்கு ஏற்றபடி பார்த்துப் பார்த்து மஞ்சளை அரைத்துக் குழம்பாக்கிக் கொண்டு அதனைக் கொண்டு அவன் நாக்கினை வழித்து அவனை நீராட்டுகிறாள் அசோதைப்பிராட்டியார். அப்படிப்பட்ட அழகில் சிறந்த நம்பியான கண்ணன் தன் தாய் தந்தையரை அம்மா, அப்பா என்று தன் அழகிய மழலையால் அழைக்கிறான்; அந்த அழகைக் காணுங்கள். 'கண்ணா. என்னைப் பார். இங்கே பார்' என்று அழைப்பார்களுக்கு அவர்கள் மகிழும்படி குளிரக் காணும் அவனது திருக்கண்களின் அழகைக் காணுங்கள். அதோடு அவர்களைப் பார்த்து புன்முறுவல் புரியும் அந்த அதரங்களையும் முறுவலையும் பாருங்கள். கற்பகப் பூவின் மொட்டு போல் இருக்கும் அவனது மூக்கின் அழகைக் காணுங்கள். நன்கு அடர்த்தியாக வளர்ந்திருக்கும் குழலைக் கொண்டிருக்கும் பெண்களே காணுங்கள்.

உரை:2

கண்ணபிரானுடைய திருமேனியின் ஸௌகுமார்யத்தை யறியும் யசோதையானவன் தான் அத்திருமேனிக்குத் தகுதியாக அரைத்த மஞ்சட் காப்பாலே நாக்கை வழித்துத் திருமஞ்சனஞ் செய்யும்படி அடங்கியிருப்பன் கண்ணன்; அவனுடைய வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருக்கிறப்படியைப் பாருங்களென்கிறது. வாக்கு என்றது - தாய், தந்தை முதலானாருடைய நாமங்களைச் சொல்லுகிற வாகிந்திரியத்தைச் சொன்னபடி. வாயும் என்றது அதரத்தைச் சொன்னபடி. இனி, வாயும் என்பதை முறுவலுக்கு விசேஷணமாக்கி, வாய்த்திருக்கின்ற புன்சிரிப்பு என்று உரைக்கலாம் என்றான் ஒரு தமிழன்.

English Translation

O Ladies with dense coiffure, come here and see. With freshly ground turmeric, Yasoda carefully bathes the child and cleans his tongue. See his eyes, nose, mouth and smile.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்