விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மனமே! உன்னை*  வல்வினையேன்இரந்து* 
    கனமேசொல்லினேன்*  இதுசோரேல்கண்டாய்*
    புனம்மேவிய*  பூந்தண்துழாய் அலங்கல்* 
    இனம்ஏதும்இலானை*  அடைவதுமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வல் வீனையேன் – வல்லினையேனான நான்
உன்னை இரந்து – உன்னை வேண்டிக் கொண்டு
கனமே சொல்லினேன் – திடமாகவொன்று சொல்லுகிறேன்.
இது சோரேல்கண்டாய் – இதனை நழுவவிடாதே கொள்
(அதாவதென்னென்னில்)
புனம் மேலிய பூ பூதண் அழாய் அலங்கல் – தன்னிலத்தில் வளர்ந்த செல்லித் திருத்துழாய் மாலையையுடையனாய்

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் சொன்னதையே வற்புறுத்திச் சொல்லுகிறாரிதில், உலகில் ஒருவர் ஒரு விஷயஞ்சொன்னால் அதனை ஸாமான்யமென்று கருதி உபேக்ஷித்திருப்பாருமுண்டே. அப்படி உபேக்ஷிக்கத்தக்க வார்த்தையன்றிது. அவசியம் கைக்கொள்ளத் தக்கது என்று ருசிப்பிக்கிறபடி. மனமே! வல்லனையேன் உன்னையிரந்து இது கனமே சொல்லினேன்–பால் குடிக்கக் கால்பிடிப்பாரில்லையுலகில். நானோ உன்னைப் பால் குடிக்கக் கால்பிடிக்கிறேன்காண் நெஞ்சே! * முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே!* என்று நான் முன்பேசொல்லி வைக்கும்படி நல்லதிலே முற்பட்டு ஈடுபட்டிருக்கிறவுனக்கு எம்பெருமானிடத்தில் ப்ராவண்யம் இயற்கையாயிருக்க உனக்கு நான் சொல்லவேண்டுவதொன்றில்லை என் செல்லாமையாலே சொல்லுகிறேனித்தனை காண். என்கிற வடசொல் கனமெனத்திரிந்தது திடமாக வென்றபடி. கனகம் என்ற வடசொல் கனமெனச் சிதைந்ததென்றுங் கொள்ளலாம். பொன் போன்ற பரமாத்தத்தை யென்றபடி. இது சோரேல்–இந்த வார்த்தையை உபேக்ஷியாதேகொள். எந்தவார்த்தையை யென்ன, பின்னடிகளால் அதனை விவரிக்கிறார். [புனமேவிய பூந்தண்டுழாயலங்கலினமேது மிலானை யடைவதுமே] பரமபோக்யனான அவனை ஆச்ரயித்திருக்கை யென்னுமிவ்வர்த்தமே. தன்னிலத்திலே வளர்ந்து அழகிதான திருத்துழாய் மாலையை பணிந்து "தோளிணைமேலும் நன்மார்பின்மேலும் சுடர்முடிமேலும் நாளிணைமேலும் புளைந்த தண்ணந்துழாயுடையம்மான்" என்று வாய்நிறையப் பேசும் படியான போக்யதை வாய்ந்த ஸர்வாதிகளை விட்டு பிரியாமையாக்கிற இவ்வர்த்தத்தையே திடமாகச் சொன்னாராயிற்று.

English Translation

The Lord of fragrant Tulasi garland is one without a second, experience him, I beg of you, O Heart, pray take heed; Never let him leave you

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்