விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அவனேஅகல்ஞாலம்*  படைத்துஇடந்தான்* 
    அவனேஅஃதுஉண்டுஉமிழ்ந்தான் அளந்தான்*
    அவனேஅவனும்*  அவனும்அவனும்* 
    அவனே மற்றுஎல்லாமும்*  அறிந்தனமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அகல் ஞாலம் படைத்து இடந்தான் அவனே – விபுலமான ஜகத்தைப் படைத்ததும் (வராஹ மூர்த்தியாகி) இடந்ததும் அப்பெருமானே
அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான் அவனே – அந்த ஜகத்தை உண்டதும் உமிழ்ந்ததும் அளந்ததும் அவனே
அவனும் அவனும் அவனும் அவனே – பிரமனும் சிவனும இந்திரனும் அவனே
மற்று எல்லோமும் அவனே – மற்றுள்ள ஸகல சேதநாசேதங்களும் அவனே (என்னு மில்லிஷயத்தை)
அறிந்தனம் – (அவன் தந்த ஞானத்தாலே) அறிந்து கொண்டோம்

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் நாராயண சப்தம் ப்ரஸ்துதமாகையாலே அதன் பொருளைப் பன்னி யுரைக்கிறாரிதில், அவனே அகல்ஞாலம் படைத்திடந்தான் = மிக விசாலமா பூமண்டலத்தை யுண்டாக்கினானுமவனே அதனை ஹிரண்யாசணனென்னுமசுரன் பாயாகச் சுருட்டி கொண்டுபோக மஹாவராமாமி இடந்தெடுத்தானும் அவனே. இத்தால் காரணத்வமும் ரக்ஷகத்வமும் சொல்லப்பட்டன. ‘அவனே’ என்கிற ஏகாரத்தினால் ஸஹகாரியொன்றையும் அவேஷியாத பெருமை தெரிவிக்கப்பட்டது. அவனே அஃது உண்டுமிழ்ந்தான் அளந்தான் = பிரளயங் கொள்ளாதபடி பூமியையெடுத்து வயிற்றிலே வைத்திருந்து, பிறகு வெளிநாடுகாண உமிழ்ந்த, மற்றொருகால் மஹாபுவியாலே அபஹரிக்கப்பட்டதாக எல்லை நடந்து மீட்டுக் கொண்டாலும் அவனே. இனி, பின்னடிகளின் கருத்து–பிரமன் சிவன் இந்திரன் முதலானாருடைய ஸ்வரூபஸ்திதி ப்ரவருத்திகளும் அவனிட்ட வழக்கென்கிறது. பிரமன் சிவன் இந்திரன் முதலானாருடைய பெயர்கள் ஒன்றும் பசுரத்தில் இல்லையே யென்று சங்கிக்கவேண்டா; அவனும் அவனும் அவனும் என்று சுட்டப் பெயர்களாவே இங்கெடுத்திருப்பது உபநிஷச்சாயை நாராயணாநுவாகத்தில் ஸ •••• ப்ரஹமா ஸ சிவஸ் ஸேந்த்ரஸ்ஸோசஷா பரமஸ்ஸ்வராட் என்று ஸ: ஸ: ஸ: என்று நிர்தேசித்திருப்பவற்றையே உட்கொண்டு “அவனுமவனுமவனும்” என்றருளிச் செய்தபடி,. மற்றெல்லாமும் அவனே அறிந்தனமே = பிரமன் சிவனிந்திரமனென்று பிரித்துச் சொல்ல வேணுமோ? ப்ரதாகர் அப்ரதாகர் என்கிற வாசியின்றிக்கே ஸகல சேதநாசேதங்களும் அவனிட்ட வழக்கே ன்னுமில்லிஷயத்தை எம்பெருமானே உணர்த்த உணர்ந்தேனென்றபடி மயர்வற மதிநலமருளப் பெற்றவரிறே இவர்தாம்.

English Translation

He made the wide Earth and lifted it. He swallowed it, remade it and measured it, The 'he' Brahma, the 'he', Indra and the 'he', Siva, are also him. He is all else too, we know this

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்