விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஓராயிரமாய்*  உலகுஏழ்அளிக்கும்* 
    பேராயிரம்கொண்டதுஓர்*  பீடுஉடையன்*
    காராயின*  காளநல்மேனியினன்* 
    நாரயணன்*  நங்கள்பிரான்அவனே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உலகு எழ் அளிக்கும் – ஏழுலகங்களையும் ரக்ஷிக்கும் படியான்
ஆயிரம் பேர் கொடது ஓர்பீடு உடையன் – ஆயிரந் திருநாமங்களை யுடையனாயிரு க்கையாகிற விலக்ஷணமான பெருமையை யுடையனும்
நாளம் கார் ஆயின – காளமேகம்போலே சாமளமான
நல்மேனியினன் – அழகிய திருமேனியையுடையனுமான
நாராயணன் அவனே நாங்கள் பிரான் – நாராயணனே நமக்கு உபகாரகண்

விளக்க உரை

ஒரு திரு நாமமே ஆயிரந் திருநாமங்களின் காரியஞ் செய்ய வல்லது’ என்னும்படியான பெருமை பொருந்திய திருநாமங்கள் ஆயிரமுண்டு எம்பெருமானுக்கு. இங்கு ஆயிரமென்று, குறிப்பிட்ட வொருலக்கத்தைச் சொல்லுமதன்று ; எண்யிறந்தவை என்பதற்குப் ப்ரியாயமத்தனை. வடமொழியில் *தோவே நாமஸஹஸ்ரவாந்* இத்யாதிகளிலுள்ள ஸஹஸ்ர சப்தமும் இப் பொருளதே. போர்வீரர்கள் பலரைக் காட்டி ‘இவர்களுள் ஒவ்வொருவரும் ஆயிரக் கணக்கான சுரர்களை வெல்லவல்லவர்’ என்னுமாபோலே சொல்லுகிறதிங்கு. ஒரு திருநாமம் செய்யக் கூடிய காரியத்தை மற்றொரு திருநாமம் செய்யக் கடுமோவென்று சங்கிக்க வேண்டா திருநாமத்திற்குப் பொருளான எம்பெருமான் செய்யுமத்தையே திருநாமம் செய்வதாகச் சொல்லுகிறபடியாலும், அப்பெருமான் தான் ஸக்ல பலப்ரதாந் ஸமர்த்தனாகையாலும் அஸம்பாவிதமொன்றுமில்லை யென்க. பேராயிரங்கொணட தோர் டுடையான் = இப்படிப்பட்ட அதிசயம் வாய்ந்த பலபல திருநமாங்களை யுடையனாயிருக்கையாகிற பெருமை பொருந்தியவன் என்றபடி. இவ்விடத்து ஊட்டில் “கோயிலாத்தான் புத்ரவியோத்திலே பட்டர் ஸ்ரீபாதத்திலே வந்து தன் சோகமெல்லாம் தோற்ற விழுந்து கிடக்க, அவரருளிச் செய்த வார்த்தையை நினைப்பது” என்றுள்ளது. அதாவது கோயிலாத்தானென்பவர் பட்டரையே தெய்வமாக நினைத்திருந்தவர். அவர் தமக்குப் பிறந்த பிள்ளைக்கு பட்டரென்று பெயரிட்டு வளர்த்து வந்தார். அந்தப்பிள்ளை தெய்வாதீனமாக ஆசாரியன் திருவடிசார, தந்தை பட்டர் பக்கலிலே வந்து கதறியழுதவளவிலே “நீ நம்முடைய திருநாமமிடப்பெற்ற பிள்ளை போனான் என்றன்றோ துக்கப்படுவது அந்தத் திருநாமமுடைய நாமிருக்க துக்கப்படுவானேன்?” என்று பட்டரருளிச் செய்தாராம். திருநாமமுடைய எம்பெருமான் நிலை நின்றிருந்து நம்மைக் காத்தருள்பவன் என்பதை வற்புருத்தும் இந்த ஸம்வாதம். கரைகட்டாக் காவேரிபோலே பரந்திருக்கிற திருநாமங்களை ஒருமுகஞ்செய்து அநுபவிக்கப் பாங்காக திவ்ய மங்கள விக்ரஹம் அமைந்த்தே யென்கிற ஆனந்தம் தோற்ற அருளிச் செய்கிறார். காராயின காளநன்மேனியினன் என்று, காளம் என்று இடையிலுள்ளதைக் காரோடே கூட்டியந்வயிப்பது. காளமேகமே யென்னலாம் படியான நன்மேனியை யுடையவன் என்க. இவன்தான் யாவனென்ன, நாராயணன் நங்கள் பிரானவனே யென்று திருநாமத்தை முக்த கண்டாமகச் சொல்லி முடிக்கிறார். இப்பதிகத்திற்கு இட்ட அவதாரிகையில் இரண்டு நிர்வாணம் காட்டப்பட்டுள்ளது. முதல் நிர்வாஹத்திற்கு இங்கு நாராயண னென்றது அர்த்ததில் நோக்குடையதாகும் இரண்டாம் நிர்வாஹத்திற்கு சப்தத்தில் நோக்காகும்.

English Translation

The peerless Lord protector of the seven worlds in a thousand ways, has a thousand names. The Lord of dark rain-cloud hue, he is our own Lord Narayana

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்