விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    'கூவுதல்வருதல் செய்திடாய்'என்று*  குரைகடல் கடைந்தவன் தன்னை* 
    மேவிநன்குஅமர்ந்த வியன்புனல்பொருநல்*  வழுதிநாடன் சடகோபன்*
    நாஇயல்பாடல்ஆயிரத்துள்ளும்*  இவையும்ஓர் பத்தும் வல்லார்கள்* 
    ஓவுதல்இன்றிஉலகம் மூன்றுஅளந்தான்*  அடிஇணை உள்ளத்துஓர்வாரே  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாஇயல் பாடல் – திருநாவின் தொழிலான லாகிய
ஆயிரத்துள்ளும் – ஆயிரம் பாசுரங்களினுள்ள
இவையும் பத்தும் வல்லார்கள் – இப்பதிகத்தைக் கற்க வல்லவர்கள்
மூன்று உலகம் அளந்தான் அடி இணை – திரி விக்கிரமனுடைய பாதங்களை
ஓவுதல் இன்றி – அநவரதமும்

விளக்க உரை

இத்திருவாய்மொழி கற்கைக்குப் பலன் எம்பெருமானுடைய திருவடிகளை நிரந்தரம் சிந்திக்கப் பெறுதலேயாம் என்று தலைக்கட்டியருளுகிறார். குரை கடல் கடைநதவன் தன்னைக் குறித்து 'கூவுதல் வருதல் செய்திடாய்' என்று பிரார்த்தித்த ஆழ்வாரருளிச் செய்த ஆயிரத்தினுள்ளும் இப்பதிகம் வல்லார் அடியவர்க் கெளியனான எம்பெருமானுடைய திருவடிகளை நிரந்தமாக நெஞ்சினுள்ளே யநுபவிக்கப்பெறுவர் என்றாராயிற்று,. திருவடி வருடவேணுமென்டிகிற அபிநிவேச மில்லாமலே ஸ்வப்ரயோஜனத்திலேயே ஊன்றியிருக்குமவர்களுக்கும் உடம்பு நோவக் கடல் கடைந்து அமுதங்கொடுத்துக் காரியஞ் செய்யுமெம்பெருமாள் நம் அபேக்ஷிதம் செய்தருளத் தட்டில்லை யென்பது தோன்றுகைக்காகக் குரை கடல் கடைந்தவன் தன்னை என்றதிங்கு. "ஓவுதவின்றி" என்பதை 'ஒர்வார்' என்கிற வினை முற்றிலும் அந்வயிக்கலாம் உலகம். மூன்றளந்தானென்பதிலும் அந்வயிக்கலாம். குணாகுண நிரூபணம் பண்ணாதே அஸங்கோசமாக உலகங்களை யளந்தவனுடைய என்றபடி.

English Translation

This decad of the sweet songs by gushing Porunal's Valudi-land-Satakopan addressing the Lord who churned the ocean, asking him to come to him or call to himself, -those who master it will secure the feet of the Lord

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்