விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொடுவினைப்படைகள் வல்லையாய்*  அமரர்க்குஇடர்கெட, அசுரர்கட்குஇடர்செய்* 
    கடுவினைநஞ்சே! என்னுடைஅமுதே*   கலிவயல் திருப்புளிங்குடியாய்*
    வடிவுஇணைஇல்லா மலர்மகள்*  மற்றைநிலமகள் பிடிக்கும்மெல்அடியைக்* 
    கொடுவினையேனும் பிடிக்கநீஒருநாள்*   கூவுதல்வருதல் செய்யாயே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அமரர்க்கு இடர் கெட – தேவர்களுக்கு இடர் கெடும்படியாக
அசுரர்கட்கு இடம் செய் – அசுரர்களுக்கு துக்கத்தை வினைக்குமிடத்து
கடு வினை நஞ்சே – விரைவில் முடிக்கவல்ல நஞ்சானவனே!
என்னுடைய அமுதே – எனக்குப் பரம போக்யமான அம்ருதமே!
கலிவயல் திரு புளிங்குடியாய் – செழித்த வயல் சூழ்ந்த திருப் புளிங்குடியில் வாழ்பவனே!

விளக்க உரை

கடுவினை நஞ்சே! என்னுடையமுதே! = ஒரு வஸ்துதானே சிலர்க்கு விஷமாயும் சிலர்க்கு அமுதமாயுமிராநின்றதாயிற்று. *வஞ்சஞ்செய் சஞ்சனுக்கு நஞ்சானனை* என்றார் திருமங்கை யாழ்வாரும் "என்னுடையமுதே" என்று சொல்லப்பட்ட இவ்வமுதம் எங்கிருக்கிறதென்ன, கலிவயல் திருப்புளிங்குடியாய்! என்கிறார். இங்கே ஈடு:– "இவ்வம்ருதத்துக்குக் கடல் கடைதல் ஸ்வர்க்கத்திலே போதல் செய்யவேண்டா; திருப்புளிங்குடியிலே ஸந்நிஹிதமாயிற்று இவ்வம்றுதம்" திருப்புளிங்குடியா யென்றழைத்து அவனுக்கு ஸமாசாரம் சொல்லுகிறார் பின்னடிகளால் வடிவழகுக்கு ஒப்பில்லாத பெரிய பிராட்டியாரும் ஸ்ரீபூமிப் பிராட்டியாரும் தங்களுடைய பரம ஸுகுமாரமான திருக்கைகளாலே பிடிக்கும்போதும் கூசிப்பிடிக்க வேண்டும்படி அத்யந்த ஸுகுமாரமான திருவடிகளை பாவியேனும் பிடிக்குமாறு என்னை அங்கேயழைத்துக் கொள்ளுதல், அன்றிக்கே இங்கே வந்தருளுதல் ஒருநாள் செய்ய வேமென்றாராயிற்று. கொடுவினையேனும் என்றது–ப்ராப்தியுடையேனாயும் அதில் போக்யதையை யறிந்த வனுயுமிருந்து வைத்து நெடுங்காலம் இழந்திருக்கும்படி கொடிய பாபத்தை யுடையேனான நானும் என்றபடி. கூவுதல் வருதல் செய்யாயே = இரண்டு காரியங்களை விகற்பித்துச் சொல்லுமிடங்களில் பெரிய காரியத்தை முன்னே சொல்லுவதும், சிறிய காரியத்தை பின்னே சொல்லுவதும் இயல்பு. எம்பெருமான் தானே வருவதென்பது பெரிய காரியமாயும், ஆழ்வாரைக் கூவிக் கொள்வதென்பது சிறிய காரியமாயுமிருப்பதால் "வருதல் கூவுதல் செய்யாயே" என்று சொல்ல ப்ராப்தமாயிருக்க, கூவுதல் வருதல் செய்யாயே யென்று சொல்லியிருப்பதேன்? என்று சங்கை தோன்றும் ; இதற்கு நம்பிள்ளை யருளிச் செய்வது காணீர்– "முற்பட 'வருதல்' என்றிலராயிற்று அஸ்ஸமுதாயத்தைக் குலைக்க வொண்ணா தென்னுமத்தாலே" என்று. அதாவது, *வடிவிணையில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் ஸந்நிவேசத்தைத் தாமம் கண்டுகளிக்க ஆழ்வார் ஆசைப்பட்டவராகையாலே அந்தச் சேர்த்தி யழகைக் குலைக்க மனமில்லாமை பற்றி, வருதலை முன்னே சொல்லிற்றிலரென்கை.*

English Translation

O Lord of happy-fields Tiruppulingudi, my ambrosia who destroys terrible Asuras! Lord wielding many fierce weapons. Lord who destroyed the gods' woes. The peerless lotus-dame Lakshmi and Earth Dame press your lotus feet. That I too may press your feet, come to me or call me unto yourself!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்