விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வீற்றுஇடம்கொண்டு வியன்கொள்மாஞாலத்து*  இதனுளும் இருந்திடாய்*  அடியோம் 
    போற்றி ஓவாதே கண்இணை குளிர*  புதுமலர்ஆகத்தைப்பருக* 
    சேற்றுஇளவாளை செந்நெலூடுஉகளும்*  செழும்பனைத் திருப்புளிங்குடியாய்* 
    கூற்றமாய்அசுரர் குலமுதல்அரிந்த*  கொடுவினைப்படைகள் வல்லானே! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அசுரர் குலம் – அஸுரவர்க்கத்தை
முதல் அரிந்த – வேரோடே களைந்ததொழித்த
கொடு வினை படைகள் வல்லவனே – கொடுந்தொழில் செய்யவல்ல ஆயுதங்களை விதேயமாக புடையவனே
மீற்றிடல் கொண்டு – உனது மேன்மை இடங்கொண்டு தோன்றும்படி
வியன் கொள்மா ஞாலத்து இதனுளும் – விஸ்தாரமான மஹா பூமண்ட லத்தினுள்ளேயும்
 

விளக்க உரை

எம்பெருமானுடைய பரமஸுகுமாரமான திருமேனிக்கு இந்த முரட்டு நிலம் அடியோடு தகாது ; ஆயினும் இங்குள்ள பக்தர்கள் ஸேவிக்கும்படியாக இம்முரட்டு நிலத்திலும் எம்பெருமானெழுந் தருளியிருக்க ப்ராப்தமாகிறது என்கிற தத்துவத்தை வெளியிட்டுக் கொண்டு பிரார்த்தனை பண்ணுகிறாரிப் பாட்டில் "மாஞாலத்திதனுளும்" என்கிற உம்மை–எம்பெருமானுடைய ஸெளருமார்யத்திற்கு இந்நிலத்திவிருப்பு தகுதியற்றது என்னுமிடத்தைக் காட்டித்தரும். வீற்றிடங்கொண்டு இருந்திடாய்=உன்னுடைய பெருமை தோற்ற இருந்தருள வேணுமென்றபடி. இதனுளும்–"உன்னைக் கொண்டு ஒரு கார்யமில்லாத இந்த ஸம்ஸாரத்திலே" என்பர் நம்பிள்ளை. உண்மையில் இந்த ஸம்ஸாரத்திலுள்ள பொருள்களையெல்லாம் ஹேயமென்று சிறிதும் பாராதே உகக்கிறோம். எம்பெருமானொருவனையே வெறுக்கிறோம். இப்படியிருந்தும் இங்கே வந்து நிற்பதுமிருப்பதும் கிடப்பதுமாயிருக்கிறானவன் தன்னுடைய பரமக்ருபையாலே "தன்னை அநாதரிக்கிறவர்களைத் தான் ஆதரித்து நிற்கிற விடம்" என்பது ஸ்ரீவசநபூஷணம். இருந்திடாய் = சாய்ந்தருளினபோதையழகு கண்டோம்; இருந்தருளும் போதை யழகுங்காணவேண்டாவோ? அதையுங் காட்டியருளாய் என்கிறார். இங்கே பட்டர் அருளிச் செய்வராம்– "இவையெல்லாம் நமக்குக் கோயிலே காணலாமிறே சாய்ந்தருளினவழகு பெரியபெருமாள் பக்கலிலே; நின்றருளினவழகு நம்பெருமாள் பக்கலிலே; இருப்பிலழகு பெரிய பிராட்டியார் பக்கலிலே" என்று. 'இருந்திடாய்' என்று நிர்ப்பந்திருக்கிறது எதற்காகவென்ன, அடியோம் போற்றி ஓவாநே கண்ணிணை குளிரப் புதுமலராகத்தைப் பருக என்கிறார். அடியோமென்றது–இவ்விருப்பைக் காண ஆசைப்பட்டிருக்கிற நாங்களென்றபடி, போற்றி–இவ்விருப்பு இங்ஙனே நித்யமாகச் செல்லவேணு மென்று மங்களாசாஸனம்பண்ணி யென்றபடி. புதுமல ராகத்தைக் கண்ணிணை குளிரப் பருக–செவ்விப்பூப்போலே ஸுகுமாரமாயிருக்கிற திருமேனியைக் கண்குளிர அநுபவிக்கும்படியாக புஷ்பஹாஸ ஸுகுமாரமான வடிவுக்கு "புது மலராகம்" என்று ஆழ்வார் திருநாமஞ்சாத்துகிறார். ஆகம்–திருமேனி ஆகத்தைக் காண என்னவேண்டியிருக்க 'ஆகத்தைப்பருக' என்றதுடிதேனும்பாலுங்கன்னலுமமுதமான திருமேனியை "லோசநாப்யாம் பிபந்நில" என்கிறபடியே பருகவேணுமென்னுமாசையே தமக்குள்ளமையைக் காடினபடி. உபநிஷத்தும் "ரஸோ வை ஸ:" என்று கூறினவிஷயமாகையாலே பருகத்தக்கதேயன்றோ,.

English Translation

O Lord of Tiruppulingudi where fish dance in golden paddy fields, choose a niche and sit here too, praised by all the worlds, that we devotees may hover like bees and sip the nectar of your fresh blossom face. O Lord who routed Asuras by the score, wielding many fierce weapons!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்