விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காய்சினப்பறவைஊர்ந்து*  பொன்மலையின் மீமிசைக் கார்முகில்போல* 
    மாசினமாலி மாலிமான்என்று*  அங்குஅவர் படக்கனன்று முன்நின்ற*
    காய்சினவேந்தே! கதிர்முடியானே!* கலிவயல் திருப்புளிங்குடியாய்* 
    காய்சினஆழி சங்குவாள் வில்தண்டுஏந்தி*  எம்இடர்கடிவானே!  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கார்முகில் போல – காள மேகம் போலே
காய் சினம் பறவை ஊர்ந்து – வெல்லிய சினத்தையுடைய பக்ஷி ராஜனை நடத்தி
மா சினம் மாலி – பெரிய சினத்தை யுடையனாய்க் கொண்டு வந்த மாலி யென்ன
மான் மாலி – சமாலி யென்ன
என்றவர் அங்கு பட – இப்படிப்பட்டவர்கள் அங்கே முடியும் படியாக

விளக்க உரை

காய்சின வேந்தோ! விரோதிகளைக் காய்ந்து போடும் சினத்தையுடைய ஸ்வாமியே! என்றபடி,. இங்கு ஓர் ஆராய்ச்சி குறிக்கொள்ளத்தக்கது; திருப்புளிங்குடி யெம்பெருமானுக்குத் காய்சின வேந்து என்று திருநாமம். ஈட்டிலும் நம்பிள்ளை இது திருநாமமென்றே யெடுத்துக் காட்டியுள்ளார். இப்படியிருக்க, காய்சின வேந்து என்கிற இச்சொல்லைச் சிலர் 'காசினி வேந்து' என்று ஆக்கினதோடு நில்லாமல், காசினி யென்று பூமிக்குப் பெயராதலால் காசினி வேந்தென்றது பூமிக்கு அரசன் என்றவாறு என்று கொண்டு இத்தலத்தெம்பெருமானைப் பூமிபாலன் என்கிற வட சொல்லால் வழங்கி வருகின்றனர். திருநரங்கூரைச் சேர்ந்த மாலைப் பூமிபாலன் என்கிற வட சொல்லால் வழங்கி வருகின்றனர். திருநாங்கூரைச் சேர்ந்த பதினொரு திருப்பதி களையுஞ் சேர்த்து "நத்தீப கடப்ரணர்த்தக மஹாகாருண்ய ரக்தாம்பக" இத்யாதியாக ஒரு ச்லோகம் இருப்பதுபோல, ஆழ்வார் திருநகரியைச் சார்ந்த நவ திருப்பதிகளையுஞ் சேர்த்து "வைகுண்ட நாத விஜயாஸந பூமிபால" இத்பாதியாக வொரு ச்லோகம் ப்ரஸித்தமாகவுள்ளது. இது மணவாள மாமுனிகள் அருளிச் செய்ததென்றும் சொல்லி வருகிறார்கள். ஈட்டிலருளிச்செய்த படிக்கு நேர்விரோதமாகக் காசினி வேந்தென்று பாடங்கொண்டு பூமிபாலனென்று அதற்கு ஸம்ஸ்கருதமாக்கி மணவாள மாமுனி களருளிச் செய்தாரென்றால் இது ஸம்பாவிதமாகுமோ? ஒரு வியாக்யானத்திலாவது காசினி வேந்தென்கிற பாடமும் அதற்குரிய பொருளும் காணப்படவில்லை. "காயுஞ் சினத்தையுடை வேந்தே!" என்றே ஸகல வியாக்யானங்களிலு முள்து. "இது திருநாமம்" என்று இருபத்தினாலாயிரப்படியிலும் ஈட்டிலும் விசேஷித்து அருளிச் செய்யப்பட்டுமிருக்கிறது. இங்ஙனேயிருக்க, விபரீதம் எங்ஙனே புகுந்ததென்று ப்ராமாணிக ப்ராஜ்ஞர்கள் ஆராயக்ககடவர்கள். உண்மை யென்ன வென்றால் காய்சின வேந்தென்பதைக் காசின வேந்தென்று வழங்கிவர, பிறகு அது காசினி வேந்தென்று வழங்கப்பட்டு, அதற்கு பூமிபாலனென்று அர்த்தமும் செய்யப்பட்டதாயிற்று. திவ்யப்ரபந்தத்திலும் வியாக்யானங்களிலும் பரிசய மற்றவர்களின் கணி இது. ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபத்திலுள்ள திருத்தண்கால் என்னுந் திருப்பதியைத் திருத்தங்காவென்று வழங்கி வந்து ஸம்ஸ்க்ருத்தில் தங்கால சேஷத்ரமாக்கி ஸ்தல புராணமும் இட்டிருப்பதுபோல, இங்கும் பூமிபால சேஷத்ர மாஹாத்மிய மென்று ஒரு ஸ்தல புராணமும் தோன்றி யிருக்கக் கூடும். கதிர் முடியானே! – அடியார்களை ரக்ஷிப்பதற்கென்று நீ திருவபிஷேக மணிந்திருக்க, நான் இழக்கலாமோ வென்கிறார் போலும், கலிவயல் திருப்புளிங்குடியார்!= செழிப்புமிக்க வயலையுடை திருப்புளிங்குடியிலே திருக்கண்வளர்ந் தருளுமவனே! நீ இப்படி அணினாயிருக்க நானிழக்கலாமோ வென்கை. ஈற்றடியில் பஞ்சாயுதச் சேர்த்தியை யருளிச்செய்கிறார். *எப்போதுங் கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்* என்றாப்போலே அடியோங்களுடைய ஆபத்துக்களைப் போக்குகைக்காக நீ பஞ்சாயுதாழ்வார்களோடே கூடியிருக்க என் ப்ரதிவந்தகங்கள் என் செய்யும்? என்றவாறு.

English Translation

O Lord in the happy fields of Tiruppulingudi, Kalsinivenda, -terribly angry monarch, -like a dark cloud on a golden peak you come riding the angry bird, stood and fought a fierce battle and killed Mali and surmali. With your conch and other terrible weapons, you do end our woes!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்