விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பவளம்போல் கனிவாய்சிவப்ப நீகாணவந்து*  நின்பல்நிலா முத்தம்* 
    தவழ்கதிர்முறுவல்செய்து*  நின்திருக்கண் தாமரைதயங்க நின்றருளாய்,*
    பவளநன்படர்க்கீழ் சங்குஉறைபொருநல்*  தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்* 
    கவளமாகளிற்றின் இடர்கெடத்தடத்துக்*  காய்சினப்பறவைஊர்ந்தானே!  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பளவம் நன்படர் கீழ் – நல்ல பவளப் படரின் கீழே
சங்கு உளை – சங்குகள் உறையப் பெற்ற
பொருநல் – தாமிர பர்ணியையுடைய
நண் திருப்புளிங்குடி கிடந்தாய் – அழகிய திருப்புளிங் குடியிலே திருக்கண் வளர்ந்தருளுமவனே!
கவளம் மா களிற்றின் – பவளங்கொள்ளுமியல்லினான கஜேந்திராழ்வானுடைய

விளக்க உரை

*கவளமாகளிற்றினிடர்கெடத் தடத்துக் காய்சினப் பறவை மயூர்ந்தானே!* என்ற விளியினால் கஜேந்திராழ்வானுக்கு வந்து தோற்றினாப் போலே தமக்கு வந்து தோற்றி யருளவேணுமென்று பிரார்த்திக்கின்றமை விளங்கும். கீழ்ப் பாட்டில், பவளம் போல் கனிவாய் சிவப்பல் காண வரவேணுமென்றாரே; அவவளவிலும் பர்யாப்தியில்லாமையாலே இன்னமும் சில மநோரதங்களையும் விஜ்ஞாக்கிறாரிதில், பவளம் போல் கனிவாய் சிவப்பக் காண வந்து, அதற்குமேலே பன்னிலாமுத்தல் தவழ்கதிர் முறுவல் செய்ய வேணும்; அதற்குமேலே திருக்கண் தாமரை தயங்க நின்றருளவும் வேணும் என்கிறார். பல்லாகிற நிலாமுத்து நிரையானது கதிர் உள்ளடங்காதே புறம்பேதவழும்படி புன்முறுவல் செய்யவேணுமென்கிறார். நிலாமுத்த மென்றது–ஒளியுடைய முத்துக்கோவை யென்றபடி. இனி மற்றொரு வகையாகவும் பொருள் கூறுவர்; முத்தம் என்று அதரத்தைச் சொன்னபடியாய், அதரத்திலே பல் நிலாக்கதிர் தவழும்படி என்று, முந்துற நாலடிவந்து, பின்னை அதுவும் மாட்டாதே ஸ்தப்தனாய் நிற்கும் நிலை காணவேண்டி 'நின் திருக்கண்தாமரை தயங்க நின்றருளாய்' என்கிறார். பின்னடிகளிரண்டும் விளி. நல்ல பவளப்படரின் கீழே சங்குகள் நிராபாதமாய் வர்த்திக்கப் பெற்ற தாமிரபர்ணியையுடைத்தான திருப்புளிங்குடியிலே திருக்கண் வளர்ந்தருளுமவனே! *நாராயணாவோ மணிவண்ணா நாகணையாய்! வாரா யென்னாரிடரை நீக்காய்* என்று கூயிழைத்த ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய இடர் கெடும்படிபயாக மடுவின் கரையிலே பெரிய திருவடியை நடத்தினவனே ! என் வேண்டுகோளைத் தலைக்கட்டியருள வேணுமென்றோராயிற்று.

English Translation

O Lord reclining inTiruppurlingudi in cool waters where conch and corals abound! Pray come and stand before me, your coral lips reddening, flashing a smile of dazzling pearls, your lotus eyes half closing! Did you not come riding the Garuda-bird to save the leg-bitten elephant?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்