விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கைஇருந்து*  வைகுந்தத்துள் நின்று* 
    தெளிந்தஎன்சிந்தை அகம்கழியாதே*  என்னைஆள்வாய் எனக்குஅருளி*
    நளிர்ந்தசீர்உலகம் மூன்றுடன்வியப்ப*  நாங்கள்கூத்துஆடி நின்றுஆர்ப்ப* 
    பளிங்குநீர் முகிலின்பவளம்போல்*  கனிவாய்சிவப்பநீ காணவாராயே   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எனக்கு அருளி – எண் திறத்திலே க்ருபை பண்ணி
நரிள்ந்த சீர் – (உனது) குளிர்ந்த திருக்குணத்தை பற்றி
உலகம் மூன்று உடன் வியப்ப – மூவுங்கும் ஒருமித்து ஆச்சரியப் படும்படியாகவும்
நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்ப – நாங்களும் கூத்தாடிக் கோளாஹலம் செய்யும்படியாகவும்
பளிங்கு நீர் – தெளிந்த நீரையுடைத்தான

விளக்க உரை

திருவாய்மொழியாயிரத்திலும் நம்மாழ் வாருகந்த திவ்ய தேசங்களில் விளங்கும் திருக்குணங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் ககாட்டும் பிரகாணத்தில் இம்மூன்று தலங்களிலுஞ் சேர்ந்து ஒன்றாக விளங்குந்திருக்குணத்தை யெடுத்துக்காட்டியுள்ள சூர்ணையாவது–"போக்யபாகத்வரை தெளிந்த நதைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம்" என்பது (இதன் கருத்தாவது) பசி களத்தவன் அன்னம் பக்வமாருமளவும் ஆறியிருக்க மாட்டாமல் பதற்றத்தாலே அன்னம் பக்வமாருமிடத்திற்கு அணித்தாகவந்து கிடப்பதும் இருப்பதும் நிற்பதுமாய் தன்னுடைய அலமாப்பைக் காட்டுவளும்; அதுபோல, எம்பபெருமானும் தனக்கு போக்ய பூதாரான ஆழ்வார்க்குப் பரமபக்திபாகம் பிறக்குமளவும் ஆறியிருக்க மாட்டாமல் தனக்குண்டான பதற்றத்தைத் திருப்புளிங்குடி வரகுணமங்கை ஸ்ரீவைகுண்டங்களில் கிடப்பதிருப்பது நிற்பதான நிலைமைகளினால் காட்டியருள்கிறானாம். இதை ஆழ்வார் *தெளிந்த வென்சிந்தை யகங்கழியாதே யென்னையாள்வாய்!* என்கிற விளியினால் ஒருவாரு காட்டியருளுகிறார். பசிகனத்தவன் அன்னம் பக்வமாருமிடத்தை விட்டகலா தாப்பாலே எம்பெருமானும் ஆழ்வாருடைய பக்தி பரிபக்வமாகுமிடமான திருவுள்ளத்தைவிட்டு ஆகலாதே வர்த்திக்கிறபடி. திருப்புளிங்குடியிலே கிடந்ததோர் கிடக்குமழகைக் காடியும், லாகுணமங்கையிலே *பிரானிருந்தமை காட்டினீர்* என்னுமிருப்பழக் காட்டியும், ஸ்ரீவைகுண்டத்திலே *நிலையார நின்றான்* என்னும் நிலையழகைக் காடியும் தம்மையீடுபடுத்திக் கொண்டமையை முதலடியிலே பேசினாராயிற்று. தெளிந்த வென்சிந்தை யகங்கழியாதே யென்னை யாள்வாய்–என் சிந்தையைக் தெளிவித்து அத்தைவிட்டுப் பிரியாதேயிருந்து குணஜ்ஞானத்தாலே யென்னைத் தரிப்பித்துக் கொண்டு போருமவனே! என்றபடி. அயோக்யதாநுஸந்தானம் பண்ணி அகலாதபடி கண்கண் சிவந்தென்கிற பதிகத்திலே என்னுள்ளத்தைத் தெளிவித்து அத்தைக் கைவிடாதே அதிலே நிரந்தவாஸம்பண்ணி எடுப்பும் சாய்ப்புமாக என்னை நடத்திக் கொண்டு போருமவனே! என்க. எனக்கருளி என்பது நீ காணவாராயே யென்பதிலே அங்வயிக்கும், நளிர்ந்த சீரை உலகம் மூன்றும் வியக்கவும், நாங்கள் கூத்தாடி நின்று ஆர்க்கவும் நீ வரவேணும் என்கிறார். 'நளிந்த சீர்' என்றது குளிர்ந்த குணம் என்றபடி. அநுஸந்திதவர்களின் உள்ளத்தைக் குளிரச் செய்யும் சீலகுணமென்க. ஆழ்வார் எப்படியபேக்ஷித்தாரோ அப்படியே செய்தான் என்று இம்மஹா குணத்தைச் சிறியார் பெரியாரென்னும் வாசியின்றிக்கே எல்லாருமறிந்து ஆச்சரியப்படும்படி வரவேணும். அவ்வளவேயுமன்றிக்கே நாங்களும் மதுவனமழித்த வானர முதலிகள் போலே ஸஸம்ப்ரமந்ருத்தம் பண்ணி நின்று கோலாஹல பரவசர்களாம்படியாகவும் வரவேணும் என்கிறாராயிற்று. பளிங்கு நீர் முகிலின் பவளம்போல் கனிவாய் சிவப்ப–தெளிந்த நீர் நிறைந்த காள மேகத்திலே பவளக்கொடி படர்ந்தாற்போலே யிருக்கிற திருவதரம் சிவந்து தோன்று மழகை நாங்கள் காணும்படியாகவும் வரவேணும்.

English Translation

Reclining in Tiruppulingudi, seated in Varagunamangai, and standing in Vaikundam, you enter my heart and clear my thoughts, Lord such is your grace! May the three words also see you, and may we shout and dance in joy. Pray come and show your cloud-hue form, and let your coral lips redden!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்